குடிநீர் நீரேற்று மையம் தத்தளிக்கிறது!

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 60வது வார்டுக்கு உட்பட்ட, ஆண்டிபாளையம் குளம் அருகே, 2005ல், நீரேற்று நிலையம் கட்டி, பயன்பாட்டில் இருந்து வருகிறது.தன் அருகிலேயே, திடக்கழிவு உர மையம், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக, குளத்து நீரும், மழைநீரும் சேரும் பகுதி, சின்னகுளம் என்று அழைக்கப்பட்டது.அங்கு, மாநகராட்சி கட்டடம் கட்டியதால்,

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 60வது வார்டுக்கு உட்பட்ட, ஆண்டிபாளையம் குளம் அருகே, 2005ல், நீரேற்று நிலையம் கட்டி, பயன்பாட்டில் இருந்து வருகிறது.தன் அருகிலேயே, திடக்கழிவு உர மையம், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக, குளத்து நீரும், மழைநீரும் சேரும் பகுதி, சின்னகுளம் என்று அழைக்கப்பட்டது.அங்கு, மாநகராட்சி கட்டடம் கட்டியதால், வழக்கம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன், சுத்திகரிப்பு நிலையத்தில், கான்கிரீட் தொட்டி மண்ணில் புதைந்தது; அருகில் இருந்த கட்டடம் சேதமாகி, இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.சிறிய மழை பெய்தாலும், சுத்திகரிப்பு நிலைய கட்டடம் மற்றும் மேல்நிலை தொட்டி வளாகம், தண்ணீரில் மிதக்கிறது. இதற்காகவே, 24 மணி நேரமும், ராட்சஷ மோட்டார் வைத்து, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கடந்த, சில வாரங்களாக இதேநிலை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், மூன்றாவது திட்ட நீரேற்று மையத்துக்கு புதிய ஆபத்து சூழ்ந்துள்ளது. மொத்தம், 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்தொட்டி, தரைமட்ட தொட்டிகள் உள்ள வளாகத்தில் மழைநீர் சூழ்ந்தது.அதிர்ச்சி அடைந்த, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக அதிகாரிகள், மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர்.பொதுமக்கள் கூறுகையில், 'வழக்கமாக மழைநீர் வந்து குளத்துக்கு சேரும் பகுதியில், கட்டடங்களை கட்டியதால், இவ்வளவு சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் செல்ல, தனி வடிகால் வசதி அமைக்கும் வரை பிரச்னை தீராது. 30 ஆண்டுகளாக இல்லாத பிரச்னைகள் தற்போது வந்துள்ளது.நெடுஞ்சாலை ரோட்டில் தண்ணீரை விடுவதால், ரோடும் சேதமாகி விடும். எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X