செய்தி செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி மையங்களுக்கு 'டிவி' அனுப்பும் பணி தீவிரம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்ட கலர் 'டிவி'க்கள், அங்கன்வாடி மைய பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது.முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது பொதுமக்களுக்கு இலவச கலர் 'டிவி' வழங்கும் திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்டது. அவ்வகையில் கடந்த 2011ம் ஆண்டில் திருப்பூருக்கு வழங்கப்பட்ட 'டிவி'க்கள்

திருப்பூர்: பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்ட கலர் 'டிவி'க்கள், அங்கன்வாடி மைய பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று துவங்கியது.முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது பொதுமக்களுக்கு இலவச கலர் 'டிவி' வழங்கும் திட்டம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்டது. அவ்வகையில் கடந்த 2011ம் ஆண்டில் திருப்பூருக்கு வழங்கப்பட்ட 'டிவி'க்கள் நஞ்சப்பா மற்றும் பழனியம்மாள் பள்ளி வளாகங்களில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சமீபத்தில் திருப்பூரில் வைக்கப்பட்டுள்ள 'டிவி'க்களை கலெக்டர் வினீத் நேரில் சென்று பார்வையிட்டு, இவற்றை செயல்வழிக்கற்றல் உள்ளிட்ட படத்துடன் கூடிய கல்வி வழங்குவதற்காக, அங்கன்வாடி மையங்களுக்கு பயன்படுத்த உத்தரவிட்டார்.இதையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள 'டிவி'க்களின் விவரம், அவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்து, செயல்படும் 'டிவி'க்கள் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X