அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000 நிவாரணம்: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், நேற்று பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரம் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் குடும்பங்களுக்கு
 ரூ.5,000 நிவாரணம்:  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில், நேற்று பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரம் பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க, தமிழக அரசை வலியுறுத்தி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள பா.ஜ.,வின் 11 மாவட்டங்களில், அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி, சிறப்பு அழைப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் துரைசாமி பேசும்போது, ''மழை வெள்ள பாதிப்பை சரிசெய்வதற்கு, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ''மழையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணத்தை உடனே அறிவித்து, அரசு விரைவாக வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X