தமிழ்நாடு

ரிங் ரோடு பணி எப்போது? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.பல்லடம் என்.எச்.ரோடு, பத்து ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு, ஆக்கிரமிப்பு காரணமாகவும், விரிவாக்கம் செய்யப்படாமலும், தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.போக்குவரத்து நெரிசலை

பல்லடம்: பல்லடத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.பல்லடம் என்.எச்.ரோடு, பத்து ஆண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன் பிறகு, ஆக்கிரமிப்பு காரணமாகவும், விரிவாக்கம் செய்யப்படாமலும், தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பைபாஸ் மற்றும் ரிங் ரோடு திட்டங்கள், கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டன. ஆண்டுகள் கடந்து வரும் நிலையில், திட்டங்கள் வெறும் அறிவிப்போடு மட்டுமே நின்றுள்ளன.பல்லடம் அடுத்த காளிவேலம்பட்டி பிரிவில் துவங்கி, 'மாணிக்காபுரம் ரோடு, மங்கலம் ரோடு, திருப்பூர் ரோடு வழியாக திருச்சி ரோடு மாதப்பூர் வரை' ரிங் ரோடு அமைக்கும் திட்டம் கடந்த, 2018ல் அறிவிக்கப்பட்டது.அளவீடு பணிகள் நடந்ததோடு பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதற்கிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இனி ரிங் ரோடு வருவது சந்தேகமே என்று கூறப்பட்டது.நபார்டு, மற்றும் கிராம சாலைகள் சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், 'ரிங் ரோடு அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. தற்போது, கற்கள் நடும் பணி நடந்து வருகிறது.உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி, ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்ட திட்டத்தின்படி, விரைவில் பணிகள் துவங்க வாய்ப்பு உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X