கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முன் ஜாமின் கோரி 'மாஜி' மந்திரி மனு

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக, 76 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சரோஜா; இவர் மற்றும் இவரது கணவருக்கு எதிராக, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், குணசீலன் என்பவர் புகார்

சென்னை:சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக, 76 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சரோஜா; இவர் மற்றும் இவரது கணவருக்கு எதிராக, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், குணசீலன் என்பவர் புகார் அளித்தார்.சத்துணவு அமைப்பாளர் நியமனத்துக்காக, பலரிடம் இருந்து 76.50 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், யாருக்கும் பணி நியமனம் வழங்கவில்லை என்றும் புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகராஜன் மனுத் தாக்கல் செய்தனர். புகார் அளித்தவர் உறவினர்; குடும்ப பகை காரணமாக பொய் புகார் அளித்ததாக மனுவில் கூறப்பட்டது.மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை, 24ம் தேதிக்கு தள்ளி வைத்து, அதுவரை கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X