செய்தி செய்தி

தமிழ்நாடு

நுால் விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
பல்லடம்,: நுால் விலை உயர்வை கண்டித்து, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என, சுல்ஜர் தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.சுல்ஜர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம், பல்லடம் தனியார் மண்டபத்தில் நடந்தது. தீரன் தொழிற்சங்க பேரவை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.நுால் விலை உயர்வால் அழிந்து வரும் ஜவுளி உற்பத்தி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க

பல்லடம்,: நுால் விலை உயர்வை கண்டித்து, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என, சுல்ஜர் தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.சுல்ஜர் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம், பல்லடம் தனியார் மண்டபத்தில் நடந்தது. தீரன் தொழிற்சங்க பேரவை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.நுால் விலை உயர்வால் அழிந்து வரும் ஜவுளி உற்பத்தி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப பஞ்சு நுால், மற்றும் கழிவு பஞ்சு உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். மேலும், உள்நாட்டுத் தேவைக்குப் போக பஞ்சு, நுால் பொருட்களை ஒவ்வொரு மாதமும் நிர்ணயித்து ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.நுால் விலையை குறைக்கவும், ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை தேவை. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நுால் விலை உயர்வை கண்டித்து, நவ., 26 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்லடம் பகுதி சுல்ஜர், விசைத்தறி உரிமையாளர்கள், மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X