திருப்பூர்: பகவான் சத்ய சாயிபாபாவின் 96வது அவதார திருநாள் முன்னிட்டு, திருப்பூர் அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.திருப்பூர் பி.என். ரோடு ராம்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதியில் நேற்று மகளிர் பிரிவு சார்பில் முதல் நாள் நிகழ்ச்சி நடந்தது. லிகிதா ஜெபம், சிறப்பு குழு பஜன், காயத்ரி மந்திரம் குறித்த சிறப்பு விளக்க நிகழ்ச்சி மற்றும் மங்கள ஆரத்தி ஆகியன நடந்தன.இன்று (20ம் தேதி), கல்வியாளர் பிரிவு சார்பில், மாலை 5:00 மணிக்கு ஸ்ரீ சகஸ்ர நாம பாராயணம், சிறப்பு பஜன் மற்றும் மங்கள ஆரத்தி நடக்கிறது.
குழந்தைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும்.வரும் 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு ரத்த தான முகாமும் பகல் ஒரு மணிக்கு மங்கள ஆரத்தியும் நடைபெறும். வரும் 22ம் தேதி இளைஞர் பிரிவு சார்பில் சிவஷர்மிளா பவுன்டேசன், ஆதரவற்றோர் மையத்தில் அங்குள்ளோருடன் நிகழ்ச்சி நடைபெறும்.வரும் 23ம் தேதி பகவான் ஸ்ரீசத்ய சாயி 96 வது அவதார திருநாள் முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நாகரசங்கீர்த்தனம், கணபதி ேஹாமம், கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும்.தொடர்ந்து ஸ்ரீ சகஸ்ரநாம பாராயணம், பஜன், நாராயண சேவை, வேத பாராயணம், சாய் நவரத்ன மாலை பஜன் நிகழ்ச்சியும், 'சத்ய சாய் அவதாரம்' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் மங்கள ஆரத்தி ஆகிய நிகழ்வுகள் நடைபெறும் என, திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE