தடுப்பூசி இலக்கு நிர்ணயம் சுகாதார செவிலியர்கள் எதிர்ப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், சமூகநல சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர செவிலியர் சங்கம் சார்பில், பெருந்திரள் முறையீடு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாற்றி அமைக்க வேண்டும். வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த நிர்பந்தம் செய்யக்கூடாது; இலக்கு நிர்ணயம் செய்து அச்சுறுத்தக்கூடாது. தடுப்பூசி

திருப்பூர்: கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், சமூகநல சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர செவிலியர் சங்கம் சார்பில், பெருந்திரள் முறையீடு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை மாற்றி அமைக்க வேண்டும். வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த நிர்பந்தம் செய்யக்கூடாது; இலக்கு நிர்ணயம் செய்து அச்சுறுத்தக்கூடாது. தடுப்பூசி முகாமை, மாலை, 5:00 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும்.சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்குவதை போல், கிராம சுகாதார செவிலியருக்கு, 'கிரேடு -1' பதவி உயர்வுவழங்க வேண்டுமென வலியுறுத்தி, நேற்று, பெருந்திரள் முறையீடு நடந்தது. கிராம சுகாதார செவிலியர் சங்க மாவட்ட தலைவர் பாலாமணி தலைமை வகித்தார். மூன்று சங்கங்களை சேர்ந்த தமயந்தி, சாந்தாமணி, பரமேஸ்வரி ஆகியோர், போராட்டத்தை விளக்கி பேசினர்.தமிழ்நாடு பொதுநுாலகத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலராஜசேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாநில பொதுசெயலாளர் உஷாராமணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X