துளிகள் செய்தி

தமிழ்நாடு

தீப ஒளியில் ஜொலித்த திருப்பூர்!

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் நகரம், அகல் விளக்கு தீபஒளியில் நேற்று ஜொலித்தது; கோவில்களில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.கார்த்திகை தீபத்திருவிழாவான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று மாலை, சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, கோவிலை வலம் வந்து, கொடிமரம்

திருப்பூர்: திருப்பூர் நகரம், அகல் விளக்கு தீபஒளியில் நேற்று ஜொலித்தது; கோவில்களில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.கார்த்திகை தீபத்திருவிழாவான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், நேற்று மாலை, சிறப்பு அபிேஷகம் நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, திருக்கார்த்திகை தீபம் ஏற்றி, கோவிலை வலம் வந்து, கொடிமரம் அருகே வைக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் வாசலில், சொக்கப்பனை கொளுத்தி, பக்தர்கள் வழிபட்டனர். அதன்பின், வீரராகவ பெருமாள் கோவிலில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.திருவண்ணாமலையின் மீது, திருக்கார்த்திகை தீபம் ஏற்றிய பிறகு, நகரப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும், சிறப்பு அபிேஷகம் நடத்தி, பரணி தீபமும், திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.தீபத்திருநாளையொட்டி, வீடுகள், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்களில், நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. அகல் விளக்குகளில், தீபம் ஏற்றி வைத்து, பெண்களும், சிறுவர், சிறுமியரும் வழிபட்டனர்.மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்ததால், இருள் சூழ்ந்ததும், திருப்பூர் நகர வீதிகள், திருக்கார்த்திகை தீப ஒளியில் ஜொலித்தது. சில இடங்களில், வாண வேடிக்கை பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X