திருப்பூர்: திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம், ராயபுரத்தில் உள்ள சங்க அரங்கில், நேற்று முன்தினம் மாலை நடந்தது.சங்க தலைவர் காந்திராஜன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். சாய ஆலை உரிமையாளர்கள், பொது சுத்திகரிப்பு மையத்தினர் பங்கேற்றனர். கடந்த மூன்று மாதங்களில், சாயங்கள் விலை, 40 சதவீதம் உயர்ந்துள்ளது. விறகு விலை 50 சதவீதம்; நிலக்கரி 150 சதவீதம், காஸ்டிக் சோடா 195 சதவீதம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு 51 சதவீதம்; அசிடிக் ஆசிட் 320 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.அனைத்துவகை மூலப்பொருட்கள் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், துணிக்கு சாயமேற்றுவதற்கான செலவினங்களும் பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் சாய கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது; மூலப்பொருட்கள் விலை தொடர் உயர்வால், சாயமேற்றுவதற்கான கட்டணம், மேலும் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, மொத்தம் 25 சதவீத சாய, சலவை கட்டண உயர்வு, வரும் 20ம் தேதி முதல் (இன்று) அமலுக்கு வருகிறது. அனைத்து சாய, சலவை ஆலைகளும் கட்டண உயர்வை தவறாமல் பெறவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE