சட்டசபையில் அவமானம் சந்திரபாபு நாயுடு கண்ணீர்

Updated : நவ 21, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (6+ 21)
Share
Advertisement
அமராவதி :''ஆந்திர முதல்வரானால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன்,'' என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில் வேளாண் துறை தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. இதில் ஆளும் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி
 சட்டசபை, அவமானம் சந்திரபாபு நாயுடு கண்ணீர்

அமராவதி :''ஆந்திர முதல்வரானால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன்,'' என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில் வேளாண் துறை தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது.

இதில் ஆளும் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.வார்த்தை போர் முற்றியதால் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அங்குள்ள அலுவலக அறையில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அவரை சந்தித்து சமாதானம் செய்தனர். பின், கண்ணீருடன் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டசபையில் பல்வேறு அவமானங்களை தாங்கியுள்ளேன். இருப்பினும் அமைதியாகவும், மரியாதையுடனும் இருந்துள்ளேன்.இன்று என் மனைவி புவனேஸ்வரி மீது கடுமையான மற்றும் இழிவான வார்த்தைகளை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்தினர்; இது, என் அமைதியை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.

அவர்களின் தாக்குதலுக்கு பதில் அளிக்க வாய்ப்பு தரும்படி சபாநாயகரிடம் கோரினேன். அப்போது, என் நடவடிக்கைகளை நாடகம் என ஆளும் கட்சியினர் கிண்டல் செய்தனர். பதில் அளிக்க வாய்ப்பை மறுத்த சபாநாயகர் என் 'மைக்'கை அணைத்து விட்டார். எனவே சட்டசபை நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளேன். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முதல்வராக மட்டுமே சபைக்குள் வருவது என தீர்மானித்துஉள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6+ 21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
20-நவ-202120:28:33 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN வாஜ் பாய் ஆட்சி காலம்போலவே பின்பும் உமது செல்வாக்கு பா. ஜ. கூட்டணியில் உச்சத்தில் தன இருந்தது./// வாஜ்பாய் காலத்தில் கிடைக்காத பதவிகளை அதே நன்மதிப்புட,,னும் பெருமையுடனும் மோடி உமது கட்சிக்கு வழங்க வில்லையா? ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து என்று ஒரு நொண்டிச் சாக்கை சொல்லி விட்டு உம்மை தலை மீது வைத்துக் கொண்டாடிய கூட்டணியிலிருந்து உங்க கட்சித் தலைவர்களே விரும்பாத வகையில் கூட்டணியை முறித்துக் கொண்டீர்.////////பிரதமர் கனவில் மிதந்து கொண்டு மோடியையும் மத்திய அரசையும் கண்டபடி தாக்கி அன்றாடம் அறிக்கை விட்டு ஊர் ஊராய்ப் போய் யார் யாருடனோ மேடையில் தலைக்கு மேல் கையை கோத்துப் பிடித்தீர்////// கண்ட படி சீன் போட்டீர்///பில்ட் அப் கொடுத்தீர்./// ஆடிய ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?/// கடைசியில் மக்கள் மண்ணைக் கவ்வ வைத்தார்கள்////உம்ம வயதையும் அரசியல் அனுபவத்தையும் கூட மதிக்காமல் உம் மகன் வயது கூட இல்லாத ஜெகன்,, உம்மை அப்போது முதலே ஒவ்வொரு நாளும் வார்த்தையால் பந்தாடி வருகிறான்//// இனி உம்மால் உம் கட்சியினருக்கு கூட எந்த பயனும் இல்லை//////பா.ஜ கூட்டணிக்கோ ஒரு கிஞ்சித்தும் பயன் கிடையாது/////வெறும் டெட் வெயிட் தான்////உமது அரசியல் வாழ்க்கை அவ்ளோ தான்/// அடுத்த ஆள் மகாராஷ்டிராவின் தாக்கரே./////மக்கள் மூக்கை உடைக்க சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள்////
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-நவ-202118:52:09 IST Report Abuse
sankaseshan முன்பு. மோடிஜிக்கு துரோகத்துக்கு எதிர்விளைவு கண்ணீர்விட்டு. பிரயோஜனம் இல்லை காலம் கடந்துவிட்டது.
Rate this:
Cancel
Sivakumar - Panruti,இந்தியா
20-நவ-202116:29:24 IST Report Abuse
Sivakumar இதே மாதிரிதானே அன்று NTR ம் அழுதார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X