சட்டசபையில் அவமானம் சந்திரபாபு நாயுடு கண்ணீர்| Dinamalar

சட்டசபையில் அவமானம் சந்திரபாபு நாயுடு கண்ணீர்

Updated : நவ 21, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (6)
Share
அமராவதி :''ஆந்திர முதல்வரானால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன்,'' என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில் வேளாண் துறை தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. இதில் ஆளும் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி
 சட்டசபை, அவமானம் சந்திரபாபு நாயுடு கண்ணீர்

அமராவதி :''ஆந்திர முதல்வரானால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன்,'' என தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில் வேளாண் துறை தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது.

இதில் ஆளும் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.வார்த்தை போர் முற்றியதால் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அங்குள்ள அலுவலக அறையில் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அவரை சந்தித்து சமாதானம் செய்தனர். பின், கண்ணீருடன் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டசபையில் பல்வேறு அவமானங்களை தாங்கியுள்ளேன். இருப்பினும் அமைதியாகவும், மரியாதையுடனும் இருந்துள்ளேன்.இன்று என் மனைவி புவனேஸ்வரி மீது கடுமையான மற்றும் இழிவான வார்த்தைகளை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பயன்படுத்தினர்; இது, என் அமைதியை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.

அவர்களின் தாக்குதலுக்கு பதில் அளிக்க வாய்ப்பு தரும்படி சபாநாயகரிடம் கோரினேன். அப்போது, என் நடவடிக்கைகளை நாடகம் என ஆளும் கட்சியினர் கிண்டல் செய்தனர். பதில் அளிக்க வாய்ப்பை மறுத்த சபாநாயகர் என் 'மைக்'கை அணைத்து விட்டார். எனவே சட்டசபை நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளேன். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முதல்வராக மட்டுமே சபைக்குள் வருவது என தீர்மானித்துஉள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X