தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., புதிய வரி விகிதம் அறிவிப்பால்... அதிர்ச்சி - குழப்பம்! தெளிவுபடுத்த தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

Updated : நவ 20, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்: ஜி.எஸ்.டி., வரி விகிதம் மாறுதல்களால் என்னென்ன சாதக, பாதகங்கள் ஏற்படும் என, திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில், ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கான வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. செயற்கை பஞ்சுக்கான வரி, 12 சதவீதமாக குறைகிறது; அனைத்து துணி ரகங்களுக்கான வரி, 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து விலை
ஜி.எஸ்.டி., புதிய வரி விகிதம் அறிவிப்பால்...  அதிர்ச்சி - குழப்பம்!   தெளிவுபடுத்த தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

திருப்பூர்: ஜி.எஸ்.டி., வரி விகிதம் மாறுதல்களால் என்னென்ன சாதக, பாதகங்கள் ஏற்படும் என, திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில், ஆயத்த ஆடை உற்பத்தி துறைக்கான வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. செயற்கை பஞ்சுக்கான வரி, 12 சதவீதமாக குறைகிறது; அனைத்து துணி ரகங்களுக்கான வரி, 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து விலை மதிப்பிலான ஆயத்த ஆடைகளும், 12 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.வரும் 2022, ஜன., 1ம் தேதி முதல், புதிய வரி விகிதம் அமலுக்கு வருகிறது.

இது குறித்து, திருப்பூர் பின்னலாடை துறை சங்க பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார்.

'டெக்பா' சங்க தலைவர் ஸ்ரீகாந்த் பேசுகையில், ''ஆடை உற்பத்தி யாளர்கள், பிரின்டிங் கட்டண தொகைகளை வழங்க மாதக்கணக்கில் இழுத்தடிக்கின்றனர். வரி உயர்வால், பிரின்டிங் நிறுவனங்களின் முதலீடுகள் முடங்கும். குறு, சிறு பிரின்டிங் நிறுவனங்கள் பெரும் நிதிச்சுமைக்குள் தள்ளப்படும். பிரின்டிங் கட்டணத்தை 20 நாட்களுக்குள் வழங்குவது அவசியம்,'' என்றார்.
சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி பேசுகையில், ''திருப்பூர் சாய ஆலைகள், பொதுசுத்திகரிப்பு மையங்கள் வாயிலாக செலுத்தியவகையில் மட்டும், இதுவரை 300 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி, திரும்ப பெறமுடியாமல் அரசிடம் தேக்கமடைந்துள்ளது. வரி விகிதங்கள் உயர்வு, சாய ஆலை துறையினருக்கு பயன்தரும்; உள்ளீட்டு வரி தேக்க நிலை ஏற்படாது,'' என்றார்.
'பாதகம் ஏற்படும்'

ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:சாய ஆலை மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வகை நிறுவனங்களுக்கு எத்தனை சதவீதம் வரி என்கிற தெளிவான விவரங்கள் இல்லை. 12 சதவீதமா அல்லது 18 சதவீத வரியா என்கிற பெரிய குழப்பம்உருவாகியுள்ளது.ஜி.எஸ்.டி., கவுன்சில், விரைந்து வரி விகிதம் வெளியிட்டு, குழப்பத்தை போக்கவேண்டும்.

அனைத்து ஆயத்த ஆடைகளுக்கும் 12 சதவீத வரி விதிப்பு, உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் குறு, சிறு, நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது; ஆடை வாங்கும் மக்களுக்கும் வரிச்சுமை கடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Kandasamy - Hosur,இந்தியா
25-நவ-202113:49:29 IST Report Abuse
Kumar Kandasamy கார்பொரேட் tax 28%. அது தெரியுமா? Corporate Income tax 30%. Do you know? What is mean by corporate do you know or how many corporate companies are there in Tamil Nadu? do you Know. Kindly answer.
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
21-நவ-202116:25:23 IST Report Abuse
PKN இவங்க வரி என்ற பெயரில் கைவைக்கிற இடமெல்லாம் மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள்தான். 2019ல் DTH மற்றும் மொபைல் கட்டணங்களை இரண்டு மடங்கு உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்துதின் நோக்கம் நோகாமல் GSTஐ இந்த இடங்களில் இரட்டிப்பாக்கி கொள்ள பெட்ரோல் டீசலில் காவல் மற்றும் செஸ் வரியை உயர்த்தியது. இப்ப பெட்ரோல் டீசலில் சிறிது குறைத்து அதில் ஏற்படும் நஷ்டத்தை ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்து இப்ப ஆடை மற்றும் நூலுக்கு வரியை உயர்த்தி மீண்டும் மக்கள் தலையில் பார்த்ததை ஏற்றி வைத்திருக்கிறது. ஏன் குறைந்த கார்பரேட் வரியை மீண்டும் அதிகப்படுத்த எது தடுக்கிறது. ஏற்றினால் கட்சிக்கு கொடுத்த நிதியை திருப்பி கேட்பார்கள் என்று பயமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X