தமிழ்நாடு

'எலக்ட்ரானிக் கோச் இன்டிகேட்டர்' ரயில்வே அதிகாரிக்கு எம்.பி., கடிதம்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: ரயில் பயணிகள் மிகவும் சிரமப்படுவதால், பிளாட்பார்ம்களில், 'எலக்ட்ரானிக் கோச் இன்டிகேட்டர்'கள் நிறுவ வேண்டுமென, திருப்பூர் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:பல்வேறு மாநிலத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலை தேடி திருப்பூர் வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன், பிளார்ட்பாம்

திருப்பூர்: ரயில் பயணிகள் மிகவும் சிரமப்படுவதால், பிளாட்பார்ம்களில், 'எலக்ட்ரானிக் கோச் இன்டிகேட்டர்'கள் நிறுவ வேண்டுமென, திருப்பூர் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் எம்.பி., சுப்பராயன், தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:பல்வேறு மாநிலத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலை தேடி திருப்பூர் வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன், பிளார்ட்பாம் -2க்கு செல்லும் வடக்கு நுழைவாயில் பகுதியை மேம்படுத்த வேண்டும்.கூலிபாளையம் ஸ்டேஷனில், கூடுதல் கிடங்குகள் அமைத்து, சரக்கு பிரிவு, அங்கு மாற்றப்பட வேண்டும். ஸ்டேஷனுக்கு செல்லும் நுழைவு ரோடுகள் மிகவும் சேதமாகியுள்ளன; இருபுறமும் புதிய ரோடு அமைக்க வேண்டும்.மாநகராட்சி மூலம், தினமும் ரயில்வே ஸ்டேஷனுக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும். பயணிகள் தங்கும் 'டார்மிட்ரி'யும் அமைத்து, நவீன ரயில்வே ஸ்டேஷனாக மாற்றி, கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் அமைத்து, பிளாட்பார்ம்களை அகலப்படுத்த வேண்டும்.'வை-பை', 'பயோ டாய்லெட்', மருத்துவ வசதி, பிளாட்பார்ம்களில், 'எலக்ட்ரானிக் கோச் இன்டிகேட்டர்'கள் நிறுவ வேண்டும். கோவை -திருப்பூர் - ஈரோடு - சேலம் மாவட்டங்களுக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இருந்து புதிய ரயில்களை இயக்க வேண்டும்.கோவை - நாகர்கோவிலுக்கு, திருப்பூர் வழியாக கூடுதல் ரயில் இயக்க வேண்டும். கேரளாவில் இருந்து செல்லும் ஏழு ரயில்களும், திருப்பூரில் நின்று செல்ல வேண்டும். அனைத்து ரயில்களும், திருப்பூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X