சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன மழைக்கு வீடு இடிந்து 9 பேர் பரிதாப பலி ஒரே குடும்பத்தில் உயிரிழந்த 7 பேர்

Added : நவ 19, 2021
Share
Advertisement
வேலுார்:பேர்ணாம்பட்டில் கன மழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, ஒன்பது பேர் பலியாகினர். இதில் ஏழு பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு கொட்டாற்றங்கரை ஓரம் உள்ள அஜ்ஜியா நகரைச் சேர்ந்தவர் அனிஷாபேகம், 63; கணவர் இறந்து விட்டார். வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்தார். மாடியில் இரண்டு குடும்பத்தினர்
 கன மழைக்கு வீடு இடிந்து 9 பேர் பரிதாப பலி  ஒரே குடும்பத்தில் உயிரிழந்த 7 பேர்

வேலுார்:பேர்ணாம்பட்டில் கன மழை காரணமாக, வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி, ஒன்பது பேர் பலியாகினர். இதில் ஏழு பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு கொட்டாற்றங்கரை ஓரம் உள்ள அஜ்ஜியா நகரைச் சேர்ந்தவர் அனிஷாபேகம், 63; கணவர் இறந்து விட்டார். வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்தார். மாடியில் இரண்டு குடும்பத்தினர் வாடகைக்கு வசிக்கின்றனர்.


இடிபாடு

ஆந்திர மாநிலம், வி.கோட்டா பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அஜிஜியா நகரில் சில நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முழுதும் கன மழை பெய்ததால், அப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால், அங்கு வசித்தவர்களால் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.

இந்நிலையில், காலை 6:30 மணிக்கு அனிஷாபேகத்தின் மாடி வீடு திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அனிஷாபேகம், 63; அவரது மருமகள்கள் ரூகிநாஸ், 27; மிஸ்பா பாத்திமா, 23; பேத்திகள், அபீரா, 4; அப்ரா, 3. பேரன்கள் மன்னுல்லா, 8; தாமீத், 2 மற்றும் வாடகைக்கு மாடியில் குடியிருந்த ஆசிரியைகள் கவுசர், 45; தன்ஷிலா, 27 என ஏழு பெண்கள், இரண்டு சிறுவர்கள் ஆகிய ஒன்பது பேர் பலியாகினர். பலர் இடிபாடுகளில் சிக்கினர்.
பேர்ணாம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, ஒன்பது உடல்களையும் மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 10 பேரை மீட்டு, பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான வீடு, மழை நீரில் ஊறி இடிந்து விழுந்தது வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிந்தது.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் உறவினர்கள் கலெக்டரை முற்றுகையிட்டு, வீடு இடிந்த பகுதியை ஆய்வு செய்யுமாறு கோஷமிட்டனர்.


ரூ.5 லட்சம் நிவாரணம்

முதல்வர் ஸ்டாலின், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்; படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X