திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூ., கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி குழு நிர்வாகிகள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு:மாநகரில் பெரும் பிரச்னையாக இருந்து வருவது குடிநீர் பிரச்னை. 60 வார்டுகளிலும் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.குடிநீருக்காக பிடித்து வைக்கும் தண்ணீரில், பத்து நாட்கள் கடந்தால், புழுக்கள் உற்பத்தியாகிறது. சுகாதார கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மூன்று நாட்களுக்கு, ஒருமுறை குடியிருப்பு வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் சரியான திட்டமிடல் இல்லாமல், பல குளறுபடிகளுடன் நடந்து வருகின்றன. பல பகுதிகளில் ரோடு அமைத்திடவும், பாதாள சாக்கடை பணிக்காகவும், குடிநீர் குழாய்கள் பதிப்பதுக்காக தோண்டப்பட்ட குழிகள் தாறுமாறாக தோண்டப்படுகின்றன. வேலைகள் முடித்தும், முடிக்காமலும் அரைகுறையாக மூடப்படுகின்றன.மீண்டும் தோண்டப்படுகின்றன. போக்குவரத்துக்கான ஒருபாதை சீரடைந்த பின், அடுத்த ரோடு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்வதில்லை.திருப்பூரில் உள்ள அனைத்து வாகனங்கள் செல்ல முடியாத, மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் உள்ள குளறுபடிகளை கலைய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE