தமிழ்நாடு

வேளாண் சட்டம் 02

Added : நவ 19, 2021
Share
Advertisement
வெற்றி (கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர்):இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் அமைந்தது. பல்வேறு அடக்கு முறைகள், நெருக்கடிகளையும் கடந்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். போராட்டத்தில், 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்று அவர்களின்

வெற்றி (கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர்):

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் அமைந்தது. பல்வேறு அடக்கு முறைகள், நெருக்கடிகளையும் கடந்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். போராட்டத்தில், 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்று அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம், மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்.செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி):

பிரதமர், காலதாமதமாக அறிவிப்பை வெளியிட்ட போதும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது வரவேற்கத்தக்கது. காற்று, மழை, புயல், குளிர் என, எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து, 359 நாட்கள் கடந்து விவசாயிகள் போராடி வெற்றி பெற்றது பாராட்டத்தக்கது. சட்டங்களை வாபஸ் பெற்றுள்ள அதே சமயம், விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை குறித்த அறிவிப்புகள் எதையும் பிரதமர் வெளியிடவில்லை. விவசாயிகள் நலன் கருதி அது தொடர்பான அறிவிப்பை பிரதமர் வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X