செய்தி செய்தி

தமிழ்நாடு

வானம் பொழியுது... பசுமை தழைக்குது! தாராபுரம் அருகே, 1,500 மரக்கன்று நடவு

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -7 ' திட்டத்தில், தாராபுரம், பொம்மநல்லுார் அருகே, சந்தனம், செம்மரம் உட்பட, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் நட்ட மரக்கன்றுகள், குறுங்காடுகளை போல் வளர்ந்துள்ளன. ஊட்டி, கொடைக்கானலில் தென்படும், சோலைகளை போல், திருப்பூர் மாவட்டத்திலும், குறுகிய பசுஞ்சோலைகளாக, மரங்கள்



திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர் -7 ' திட்டத்தில், தாராபுரம், பொம்மநல்லுார் அருகே, சந்தனம், செம்மரம் உட்பட, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில் நட்ட மரக்கன்றுகள், குறுங்காடுகளை போல் வளர்ந்துள்ளன. ஊட்டி, கொடைக்கானலில் தென்படும், சோலைகளை போல், திருப்பூர் மாவட்டத்திலும், குறுகிய பசுஞ்சோலைகளாக, மரங்கள் வளர்ந்துள்ளது.ஏழாவது திட்டத்தில் நேற்று, தாராபுரம் அருகே மரக்கன்றுகள் நடப்பட்டன. பொம்மநல்லுார் அடுத்த, வேலுார் வாய்க்கால் தோட்டத்தில், சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.செம்மரம் - 600, சந்தனம் -600, மகாகனி - 150, தேக்கு -150 என, 1,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. வடகிழக்கு பருவமழை, வஞ்சகமில்லாமல் பெய்து கொண்டிருப்பதால், பருவ மழையை அறுவடை செய்யும் வகையில், தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.எதிர்காலத்தில், வருவாய் கொடுக்கும் மரங்களை நட்டு வளர்க்க முன்வந்துள்ளனர். இத்திட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X