சென்னை:பயிற்சியை நிறைவு செய்யும் இளம் ராணுவ வீரர்கள், நேற்று ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டு அசத்தினர்.
ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம், சென்னை பரங்கிமலையில் உள்ளது. இங்கு 11 மாத காலம், பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுக்கு, இன்று பயிற்சி நிறைவு விழா நடக்கிறது.இதற்கான ஒருங்கிணைந்த சாகச நிகழ்ச்சி, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. 11 மாதங்களில் அவர்கள் கற்ற பயிற்சிகளை சாகசமாக செய்து அசத்தினர்.
முதலில் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உடற்பயிற்சிகள், கேரளாவின் புகழ் பெற்ற தற்காப்பு கலையான 'களறிபயிற்று'ம் நடந்தது.அதேபோல நெருப்பு வளையத்துக்குள் தாண்டுதல், மனித கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் இளம் வீரர்கள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில், பயிற்சி மைய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.கே.தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE