பட்டா கேட்டு கொட்டகை அமைத்து போராடிய மக்கள்

Added : நவ 19, 2021
Share
Advertisement
அவிநாசி: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சி, காமநாயக்கன்பாளையம், ஏ.டி., காலனியில் வசிக்கும் மக்கள், நேற்று முன்தினம் இரவு, மூணுகட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கொட்டகை அமைத்து அமர்ந்தனர். தாசில்தார் ராகவி,பி.டி.ஒ., மனோகரன், இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியதாவது:பல தலைமுறைகளாக வசித்து

அவிநாசி: அவிநாசி ஊராட்சி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சி, காமநாயக்கன்பாளையம், ஏ.டி., காலனியில் வசிக்கும் மக்கள், நேற்று முன்தினம் இரவு, மூணுகட்டிபாளையம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கொட்டகை அமைத்து அமர்ந்தனர். தாசில்தார் ராகவி,பி.டி.ஒ., மனோகரன், இன்ஸ்பெக்டர் முரளி உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர்.அரசு அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியதாவது:பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். தற்போது, குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், சிரமப்படுகிறோம்.எங்களுக்கு மாற்றிடத்தில் பட்டா வழங்க வேண்டுமென, பல முறை அதிகாரிகளுக்கு மனு வழங்கியுள்ளோம். இதற்கிடையில், கருவேலங்காடு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டுமென, தெக்கலுார் கிராம ஊராட்சி நிர்வாகத்தினரிடம் மனு வழங்கினோம். இருப்பினும், அந்த இடத்தில் மரக்கன்று நட்டு, வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த, பூமி பூஜை நடத்தியுள்ளனர். எங்களுக்கு மாற்றிடம் வழங்கும் வரை, இந்த இடத்தில் இருந்து செல்ல மாட்டோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'மாற்றிடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை வரை பொதுமக்கள் அதேயிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X