தொடரை வென்றது இந்தியா: ரோகித், ராகுல் விளாசல்

Updated : நவ 19, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (5)
Advertisement
ராஞ்சி: இரண்டாவது 'டி-20' போட்டியில்கேப்டன் ரோகித், ராகுல் அரைசதம் விளாச,இந்தியஅணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என வென்றது. நியூசிலாந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தது.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது.


ராஞ்சி: இரண்டாவது 'டி-20' போட்டியில்கேப்டன் ரோகித், ராகுல் அரைசதம் விளாச,இந்தியஅணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என வென்றது. நியூசிலாந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தது.latest tamil newsஇந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது. இந்திய அணியில் முகமது சிராஜுக்கு(இடது கையில் காயம்) பதில் ஹர்ஷல் படேல் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

நியூசிலாந்து அணியில் பெர்குசன், ரச்சின் ரவிந்திரா, டாட் ஆஸ்லேக்கு மாற்றாக ஆடம் மில்னே, இஷ் சோதி, நீஷம் இடம் பெற்றனர். 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், மிட்சல் சேர்ந்து கலக்கல் துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரில் கப்டில் 3 பவுண்டரி அடிக்க, மொத்தம் 14 ரன்கள் எடுக்கப்பட்டன. தீபக் சகார் வீசிய அடுத்த ஓவரில் மிட்சல் இரு பவுண்டரி விளாசினார். இருவரும் சேர்ந்து இந்திய பந்துவீச்சை சிதறடிக்க, முதல் 4 ஓவரில் 42 ரன்கள் எடுக்கப்பட்டன.


latest tamil newsஇந்த நேரத்தில் தீபக் சகார் பந்தில் கப்டில்(31) அவுட்டாக. நிம்மதி பிறந்தது. சிறிது நேரத்தில் அக்சர் 'சுழலில்' சாப்மேன்(21) சிக்கினார். ஹர்ஷல் படேல் 'வேகத்தில்' மிட்சல்(31) வெளியேறினார். இது இவரது முதல் விக்கெட்டாக அமைந்தது.

'சுழல்' கலக்கல்: அடுத்து வந்த பிலிப்ஸ், சாகர் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். அஷ்வின், அக்சர் படேல் சேர்ந்து 'சுழல்' ஜாலம் காட்ட, நியூசிலாந்தின் ரன் வேகம் குறைந்து போனது. அஷ்வின் வலையில் சிபர்ட்(13) வீழ்ந்தார். ஹர்ஷல் படேல் வீசிய போட்டியின் 17வது ஓவரின் முதல் பந்தில் பிலிப்ஸ் ஒரு கலக்கல் சிக்சர் விளாசினார்.

3வது பந்தில் பிலிப்ஸ்(34) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மந்தமாக ஆடிய நீஷம்(12 பந்தில் 3 ரன்) நிலைக்கவில்லை. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன் மட்டும் எடுத்தது. சான்ட்னர்(8), மில்னே(5) அவுட்டகாமல் இருந்தனர்.இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

எளிதான வெற்றி: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், லோகேஷ் ராகுல் 'சூப்பர்' துவக்கம் தந்தனர். இருவரும் அனாயசமாக சிக்சர், பவுண்டரி விளாச, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. ராகுல் அரைசதம்(65) கடந்து அவுட்டானார். ரோகித் 55 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார்(1) ஏமாற்றினார்.

அசத்தலாக ஆடிய வெங்கடேஷ்(12), ரிஷாப்(12) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 3வது போட்டி நாளை கோல்கட்டாவில் நடக்க உள்ளது.


கப்டில் முதலிடம்


நேற்று அசத்திய நியூசிலாந்தின் கப்டில்(111 போட்டி, 3248 ரன்), சர்வதேச 'டி-20' போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தியாவின் கோஹ்லி(95 போட்டி, 3227 ரன்) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202118:46:22 IST Report Abuse
சம்பத் குமார் 1). வாழ்த்துக்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு.2). வாழ்த்துக்கள் உயர்திரு ராகுல் டிராவிட் அவர்களுக்கு. உங்களை பார்த்தவுடன் மனதில் ஒர் உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை உணர முடிகிறது.3). வாழ்த்துக்கள் திரு ரோகித் சர்மா இந்தியன் T20 கேப்டன் அவர்களுக்கு. வெற்றி பயணம் தொடர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.4). விளையாட்டு போட்டிகளில் வெற்றி தோல்வி சகஜமே. 5). இரு பெரும் துருவங்கள் இணைந்து T20 கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கிய பங்களிப்பை ஊர்ஜிதம் செய்வார்கள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
Manikandan - Kaliakavilai,. Kanyakumari District.,இந்தியா
20-நவ-202115:09:07 IST Report Abuse
Manikandan அவிங்களுக்கு international match விளையாடும் போது ஓய்வு தேவை. இதே கோலி or பும்ரா or Shami or Jadeja யாராவது IPL விளையாடும் போது ஓய்வு தேவை என்று யாராவது கேட்டாா்களா? இல்லை. So அவா்களுக்கு நாட்டை விட IPL தான் முக்கியம். இவா்களை எல்லாம் Team ல் எடுக்காமல் ஒதுக்கனும்.
Rate this:
Cancel
20-நவ-202113:05:52 IST Report Abuse
மோகனசுந்தரம் ஏன்டா முக்கிய விளையாட்டில் கோட்டை விட்டுவிட்டு இது என்ன பெரிய வெற்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X