பொது செய்தி

தமிழ்நாடு

ஜன., 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வு உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Updated : நவ 20, 2021 | Added : நவ 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'கல்லுாரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள், ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின், ஜனவரி 20 முதல் நடத்தப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பிரச்னையால், 'ஆன்லைன்' வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.இந்நிலையில்,
ஜன., 20 ,நேரடி செமஸ்டர் தேர்வு, அமைச்சர் அறிவிப்பு

'கல்லுாரி மாணவர்களுக்கான நேரடி செமஸ்டர் தேர்வுகள், ஒரு மாத கூடுதல் அவகாசத்துக்கு பின், ஜனவரி 20 முதல் நடத்தப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பிரச்னையால், 'ஆன்லைன்' வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. வீட்டில் இருந்தவாறே படித்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியிலேயே மூன்று செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு, கல்லுாரிகளுக்கு நேரடியாக வந்து மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என, உயர் கல்வித்துறை அறிவித்தது. இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், உயர் கல்வி செயலர் கார்த்திகேயன் மற்றும் பல்கலை அதிகாரிகள் இணைந்து, மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் பேச்சு நடத்தினர்


கூடுதல் அவகாசம்



.பின், அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:செமஸ்டர் தேர்வு குறித்து, மாணவர் அமைப்பு பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, 11 அமைப்புகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 'ஆன்லைன் தேர்வு வேண்டாம். நேரடி தேர்வு நடத்துங்கள்; ஆனால், தேர்வுக்கு கூடுதலாக ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும்' என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, அனைத்து வகை கல்லுாரிகளிலும், ஜனவரி 20ம் தேதி முதல் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்.

அரசு மற்றும் தன்னாட்சி அந்தஸ்து உள்ள அனைத்து இன்ஜினியரிங், கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், இந்த தேர்வுகள் நடத்தப்படும்.வழக்கு வாபஸ்போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய, முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். தேர்வுகள் குறித்து, மாணவர்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம்.


ஒத்துழைப்பு

மாணவர்களுக்கு நேர்மை யான தேர்வாக, மாணவர்கள் விரும்பும் வகையில், இந்த தேர்வு நடத்தப்படும். ஜனவரி தேர்வை எழுது வதற்கு, தினமும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு வர வேண்டும். பொதுவாக செமஸ்டர் என்றால், 90 நாட்கள் தான். தற்போது அதை விட கூடுதல் அவகாசம் வழங்கிஉள்ளோம். இந்த அவகாசத்தில், பாடத்திட்டம் வரையறை செய்யப்பட்டு, செமஸ்டர் தேர்வுக்கு முன் அதற்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்.மேலும், மாதிரி தேர்வும் நடத்தப்படும். இந்த முடிவுக்கு ஏகமனதாக ஒத்துழைப்பு அளித்துள்ள மாணவர்களுக்கு நன்றி. வரும் காலத்திலும், மாணவர்களை அடிக்கடி அழைத்து பேசி, கல்வி தொடர்பான முடிவுகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
20-நவ-202109:44:42 IST Report Abuse
Chakkaravarthi Sk சூப்பர் மாணவர்களிடம் கேட்டால் நீட் போல பரிட்சையே வேண்டாம் என்றே சொல்லுவார்கள். வாழ்க ஜனநாயகம் வளர்க தமிழ்நாட்டின் புகழ்
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
20-நவ-202108:15:47 IST Report Abuse
g.kumaresan மாணவர்களுடன் பேசி முடியு செய்ய வேண்டும் என்பதுகூட அண்ணாமலை கட்டளை இட்டு தான் செய்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணாமலைதான்.அண்ணாமலை பேசினால் முடிந்து விடும் பிரச்னை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X