தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் வருகை: அரசு விழா ஏற்பாடுகள் 'ஜரூர்'

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: தமிழக முதல்வர், வரும் 22ம் தேதி திருப்பூர் வருகிறார்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா, 23ம் தேதி, கோவை வ.உ.சி., மைதானத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில், 22ம் தேதி திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில், முதல்வர் பங்கேற்கிறார்.திருமுருகன்பூண்டி, ஐ.கே.எப்., வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின்,



திருப்பூர்: தமிழக முதல்வர், வரும் 22ம் தேதி திருப்பூர் வருகிறார்; புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா, 23ம் தேதி, கோவை வ.உ.சி., மைதானத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில், 22ம் தேதி திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில், முதல்வர் பங்கேற்கிறார்.திருமுருகன்பூண்டி, ஐ.கே.எப்., வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், அரசு கட்டடங்களை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பயனாளிகளுக்கு, அரசு நல உதவிகளை வழங்க இருக்கிறார்.முதல்வர் வருகை தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமையில், போலீஸ் கமிஷனர் வனிதா, எஸ்.பி., ஷெசாங் சாய் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 45 வகையான அரசுத்துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.துறைவாரியாக நடந்து முடிந்துள்ள பணிகள்; புதிதாக துவக்கப்பட வேண்டிய பணிகள், பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு விவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நேற்று மாலையே, அதற்கான பட்டியலை, அனைத்து துறை அதிகாரிகளும், கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ளனர்.விழா நடக்கும் பகுதி களை தயார்செய்வது, போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து வழித்தடம், பயனாளிகளை அழைத்து வருவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X