கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., இல்லத்தில் சட்டவிரோத கட்டுமானம்? மாநகராட்சி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தில், சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இடையூறு எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான கீதா மோகன் தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, நான், சுதா விஜயகுமார், நிர்மலா, ஜானகி, ராதா ஆகியோர் வளர்ப்பு பிள்ளைகள்.

சென்னை:மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தில், சட்டவிரோதமாக கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இடையூறு


எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளான கீதா மோகன் தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, நான், சுதா விஜயகுமார், நிர்மலா, ஜானகி, ராதா ஆகியோர் வளர்ப்பு பிள்ளைகள். எம்.ஜி.ஆர்., எழுதி வைத்த உயிலின்படி, ராமாபுரம் தோட்ட இல்லத்தில், அவரது பெயரில் காது கேளாதோர் பள்ளி இயங்குகிறது.தோட்டத்தில் உள்ள பங்களாவை, எங்களுக்குள் பிரித்துக் கொண்டு வசித்து வருகிறோம். குடியிருப்பு கட்டடம் தவிர்த்து, அங்கு தோட்டம், கோவில், கார் நிறுத்துமிடம், நீச்சல் குளம், சிறிய தியேட்டர் எல்லாம் பொதுவாக உள்ளது. இதுவரை பாகப்பிரிவினை நடக்கவில்லை.
பங்களாவின் கீழ்தளம், சுதா விஜயகுமாருக்கு ஒதுக்கப்பட்டது. அவரும், அவரது மகன் ராமச்சந்திரனும், சொத்து முழுவதையும் சட்டவிரோதமாக எடுத்துக் கொள்ளும் நோக்கில், எங்களுக்கு இடையூறு செய்கின்றனர்.முதல் தளத்தில் குடியிருக்கும் எங்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில், கூடுதல் அறை கட்டும் விதமாக, கட்டுமானத்தை சுதா துவங்கினார். போலீசில் புகார் அளித்த பின், மற்றவர்களின் அனுமதியின்றி கட்டுமானம் மேற்கொள்ள மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.


'நோட்டீஸ்'


தற்போது, உள்அரங்கம், வாலிபால் மைதானம் என கட்டுமானம் மேற்கொள்ள துவங்கி உள்ளனர். இதற்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை. எம்.ஜி.ஆர்., தோட்டத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் கட்டுமானம் மேற்கொள்ள சுதா விஜயகுமார், ராமச்சந்திரனுக்கு அதிகாரம் இல்லை.அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்றக்கோரி, மாநகராட்சிக்கு மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ராமாபுரம் எம்.ஜி.ஆர்., தோட்டத்தில், வாலிபால் அரங்கம் என்ற பெயரில் சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் கல்யாண சுந்தரம், சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகினர். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மாநகராட்சி கமிஷனர் மற்றும் வளசரவாக்கம் மண்டல அதிகாரிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X