மாவட்ட தடகள போட்டி 'பிரன்ட்லைன்' பள்ளி அசத்தல்

Added : நவ 19, 2021
Share
Advertisement
திருப்பூர்: மாவட்ட தடகள அமைப்பு சார்பில் ஜூனியர் தடகள போட்டி 'டீ' பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை பெற்றனர்.பப்லு திவாரி, 3 ஆயிரம் மீ., ஓட்டத்தில் முதலிடம், 1,500 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடமும், தொடர் ஓட்டத்தில், இரண்டாம் இடமும் வென்று சாதனை படைத்தார். மாணவன் சண்முகம் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம், 400 மீ.,

திருப்பூர்: மாவட்ட தடகள அமைப்பு சார்பில் ஜூனியர் தடகள போட்டி 'டீ' பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை பெற்றனர்.பப்லு திவாரி, 3 ஆயிரம் மீ., ஓட்டத்தில் முதலிடம், 1,500 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடமும், தொடர் ஓட்டத்தில், இரண்டாம் இடமும் வென்று சாதனை படைத்தார். மாணவன் சண்முகம் உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம், 400 மீ., தடை தாண்டுதலில் மூன்றாமிடம், தொடர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தார்.ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதலில் இரண்டாமிடம், 80 மீ., தடை தாண்டும் போட்டியில் மூன்றாமிடமும், தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றார். உயர்தாண்டுதலில் பவித்ரா லட்சுமி இரண்டாமிடம், பொன்ஹரிதா மூன்றாமிடம் வென்றனர். ஹரீஷ் தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார்.வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் ஆகியோரை, பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X