பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரிகள் இன்று வழக்கம் போல இயங்கும்

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:விடுமுறை அறிவிக்கப்படாத மாவட்டங்களில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், நவ., 1 முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி செல்லாமல், 19 மாதங்களாக வீடுகளில் முடங்கிய மாணவர்கள், மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று, நேரடியாக பாடம் கற்க

சென்னை:விடுமுறை அறிவிக்கப்படாத மாவட்டங்களில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், நவ., 1 முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி செல்லாமல், 19 மாதங்களாக வீடுகளில் முடங்கிய மாணவர்கள், மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்று, நேரடியாக பாடம் கற்க துவங்கினர்.
பள்ளிகள் திறந்த பின் தீபாவளி பண்டிகைக்கும்; அதன்பின் மழை காரணமாகவும், பல்வேறு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மீண்டும் பல மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மழை, வெள்ள பாதிப்பால், மாவட்ட கலெக்டர்களால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X