கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிங்கவரம் கோவிலை பாதுகாக்கக் கோரி மனு

Added : நவ 19, 2021
Share
Advertisement
சென்னை:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள சிங்கவரம் ரங்கநாதசுவாமி கோவிலை பாதுகாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'விழுப்புரம் மாவட்டம் சிங்கவரத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலை பாதுகாக்க வேண்டும். 'பழமைவாய்ந்த இந்தக் கோவிலை, தொல்லியல் துறை

சென்னை:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள சிங்கவரம் ரங்கநாதசுவாமி கோவிலை பாதுகாக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'விழுப்புரம் மாவட்டம் சிங்கவரத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலை பாதுகாக்க வேண்டும். 'பழமைவாய்ந்த இந்தக் கோவிலை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்து வர வேண்டும்' என கோரியிருந்தார்.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, சத்திய நாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜரானார்.இந்த வழக்கை, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 2க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X