பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு: வாய்க்கால் தூர்வார கோரிக்கை

Added : நவ 19, 2021
Share
Advertisement
வெள்ளலூர்: வெள்ளலூரில், 90 ஏக்கர் பரப்பில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் குளம் உள்ளது. நீர் தேங்கினால், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் நீர் நிரம்புகிறது.அதிகப்படியான நீர் கிழக்கு, வடக்கு பகுதிகளிலுள்ள கடவு வாய்க்கால் வழியே வெளியேறும். அவ்வகையில் தற்போதும் குளம் நிரம்பியதால், நீர் வெளியேறுகிறது.இதில் கிழக்கு



வெள்ளலூர்: வெள்ளலூரில், 90 ஏக்கர் பரப்பில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் குளம் உள்ளது. நீர் தேங்கினால், 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலங்களில் நீர் நிரம்புகிறது.அதிகப்படியான நீர் கிழக்கு, வடக்கு பகுதிகளிலுள்ள கடவு வாய்க்கால் வழியே வெளியேறும். அவ்வகையில் தற்போதும் குளம் நிரம்பியதால், நீர் வெளியேறுகிறது.இதில் கிழக்கு பகுதியிலுள்ள கடவு வாய்க்கால் சுமார், 300 மீட்டர் தூரத்திற்கு, 40 அடி அகலத்தில் அமைந்துள்ளது. தொடர்ந்து, 15 அடி அகலத்தில் இரு கி.மீ., தூரத்திற்கு செல்லும் வாய்க்கால், மீண்டும் நொய்யல் ஆறுடன் இணைகிறது.இவ்வாய்க்காலின் துவக்கம் முதல் இறுதி வரை புதர் மண்டி காணப்படுகிறது. நீர் வாய்க்காலில் செல்லாமல் அருகேயுள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்கிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.குளத்தினையொட்டி வசிக்கும் ரமேஷ் கூறுகையில், "இங்கு, 6 குடும்பத்தினர் வசிக்கிறோம். குளத்திலிருந்து நீர் வெளியேறும்போது, வாய்க்காலை கடக்க முடியாது. குறிப்பாக, பள்ளி செல்லும், 10 குழந்தைகள் நிலைதான் மிக மோசம்.இவ்வாய்க்காலை முழுமையாக தூர் வார வேண்டும். வாய்க்காலை கடந்து செல்ல, குழாய் பதித்தால் எங்களது நீண்டகால பிரச்னை முடிவுக்கு வரும். பொதுப்பணித்துறை, பேரூராட்சி ஆகியவற்றுக்கு மனு கொடுத்துள்ளோம்.அதுபோல், குடிசை மாற்று வாரிய குடியிருப்பிலிருந்து வரும் கழிவுநீரை, சுத்திகரிக்காமல் குளத்தினுள் விடுகின்றனர். துர்நாற்றம் வீசுவது இருந்தாலும், குளத்து நீரின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X