செய்தி செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி: ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: கோவை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றுமதி,

கோவை: கோவை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.அதன்படி, வரும், 27, 28ம் தேதிகளில் தொழில் துவங்குவது, வெளிநாட்டு வணிகத்தின் அடிப்படைகள், உள்ளூர் வணிகம், சட்ட தேவைகள், சந்தைப்படுத்தல் நுட்பம், காப்பீடு, விற்பனை மாற்ற செயல்முறை என, பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.வரும், 22 முதல் டிச., 10ம் தேதி வரை(காலை, 10:00 முதல் மதியம், 12:00 வரை) லேப்டாப் பாகங்கள், சேவை கருவிகள், மதர்போர்டு சரி செய்தல், குளிர் சோதனை உள்ளிட்ட பயிற்சிகள், 'கம்ப்யூட்டர் ஹார்டுவார் ரிப்பேரிங் அண்ட் சர்வீசிங்' என்ற தலைப்பில், 15 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.தொடர்ந்து, மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, 'மொபைல் சர்வீசிங் அண்ட் ரிப்பேரிங்' என்ற தலைப்பில் கருவிகள் வகுப்பு, மொபைல் கூறுகள், பேட்டரி மதர்போர்டு என பல்வேறு பயிற்சிகள், 15 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இத்துறைகளில் வேலை வாய்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி இருக்க வேண்டும்.விபரங்களுக்கு, 0422 2993949, 94880 79266, 96007 76611 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மைய பொறுப்பாளர் பாலகுரு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X