துளிகள் செய்தி

தமிழ்நாடு

சின்னவேடம்பட்டி ஏரியில் கார்த்திகை தீப வழிபாடு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை,: சின்னவேடம்பட்டி ஏரியில் கார்த்திகை தீபம் ஏற்றி, தன்னார்வலர்கள் வழிபாடு நடத்தினர்.கோவை மாநகரின் வடக்குப்பகுதியில் 200 ஏக்கரில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரியை புனரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஏரி மற்றும் அதன் வரத்து வாய்க்கால்கள் துார் எடுக்கப்பட்டுள்ளன. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு இன்னும் ஏராளமான பணிகள் செய்யப்பட

கோவை,: சின்னவேடம்பட்டி ஏரியில் கார்த்திகை தீபம் ஏற்றி, தன்னார்வலர்கள் வழிபாடு நடத்தினர்.கோவை மாநகரின் வடக்குப்பகுதியில் 200 ஏக்கரில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரியை புனரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஏரி மற்றும் அதன் வரத்து வாய்க்கால்கள் துார் எடுக்கப்பட்டுள்ளன. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு இன்னும் ஏராளமான பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளன.கணுவாய் தடுப்பணை சீரமைப்பு கோரியும், அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தில் ஏரியை சேர்க்க கோரியும், தமிழக அரசிடம் மனு தரப்பட்டுள்ளது.இந்நிலையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசிடம் கோரிக்கையை வலியுறுத்தவும், இயற்கையிடம் வேண்டுதல் வைக்கவும், நேற்று தன்னார்வலர்கள் திரண்டு சின்னவேடம்பட்டி ஏரியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.நிகழ்ச்சியில் ஏரி பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X