செய்தி செய்தி

தமிழ்நாடு

செயற்கை பஞ்சுக்கு வரி குறைப்பு: தென்னிந்திய மில்கள் சங்கம் வரவேற்பு

Added : நவ 19, 2021
Share
Advertisement
கோவை: செயற்கை பஞ்சின் மீதான வரியை, 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைத்துள்ளதை, தென்னிந்திய மில்கள் சங்கம் வரவேற்றுள்ளது.தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி கூறியுள்ளதாவது:மத்திய அரசு அறிவித்த உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டத்தின் கீழ், செயற்கை பஞ்சினால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு 7 முதல் 15



கோவை: செயற்கை பஞ்சின் மீதான வரியை, 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைத்துள்ளதை, தென்னிந்திய மில்கள் சங்கம் வரவேற்றுள்ளது.தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி கூறியுள்ளதாவது:மத்திய அரசு அறிவித்த உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டத்தின் கீழ், செயற்கை பஞ்சினால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள், ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு 7 முதல் 15 சதவீதம் ஊக்கத்தொகை அறிவித்தது.இந்த திட்டம் வெற்றி பெற அடிப்படைத் தேவைகள், செயற்கை பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கப்பட வேண்டும் மற்றும் உள்ளீட்டு வரி பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான்.தற்போது இந்த இரு பிரச்னைகளையும் அரசு தீர்த்து வைத்துள்ளதால், உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம் வெற்றியாக அமையும். ஜவுளி உற்பத்தியை அதிகரிக்க, 40 முதல் 50 பெரிய ஜவுளி நிறுவனங்களை உருவாக்குவதே, இந்த திட்டத்தின் நோக்கம்.செயற்கை பஞ்சில் செய்யப்படும் ஜவுளி உற்பத்தி பொருட்கள், வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். பருத்தி மற்றும் நூலுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதத்தில் தக்க வைத்திருப்பது விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.பஞ்சு, நூல் மற்றும் சாயமிடுதல், துணி பதனிடுதல், பிரிண்டிங் கூலி வேலைகளுக்கு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.சாயம் மற்றும் இதர ரசாயன பொருட்களின் வரி, 18 சதவீதமாக உள்ளதால், அதிக அளவில் உள்ளிட்டு வரி பிரச்னை இருந்து வந்தது. 12 சதவீத வரியால், ஜவுளி பதனிடும் கூலித் தொழிலில் உள்ளிட்டு வரி தீர்க்கப்பட்டு விட்டது.அனைத்து ஆடைகள் மற்றும் துணிகள் மீது, 12 சதவீத வரி விதிப்பு என்பது சாமானிய மக்களுக்கு குறிப்பாக, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை பாதிக்கும்.எனவே, ஆயிரம் ரூபாய்க்கும் கீழே மதிப்புள்ள ஆடைகளுக்கு 5 சதவீத வரி விகிதத்தை தக்க வைத்திருக்கலாம்.துணி மற்றும் ஆடை நிலைகளின் வரியை, 5 சதவீதமாக உயர்த்தியது உற்பத்தியாளருக்கு மூலதன சுமையை அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X