அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதார குற்றங்களை விசாரிப்பதிலும் பட்டயக்கணக்காளர் பங்களிப்பு : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: "பொருளாதார குற்றப்பிரிவிலும், ஊழல் தடுப்பு பிரிவிலும், மோசடிகளையும் விசாரிக்க அரசு அமைத்துள்ள தனிப்பிரிவில், பட்டயக் கணக்காளர்கள் பங்களிப்பு அவசியமானது," என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்திய பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் தென்னிந்திய மண்டல அளவிலான 53வது மாநாடு கோவையில் நேற்று நடந்தது. தென் மண்டல தலைவர் ஜலபதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காணொலி வழியாக
 பொருளாதார குற்றங்களை விசாரிப்பதிலும் பட்டயக்கணக்காளர் பங்களிப்பு :   முதல்வர் ஸ்டாலின் பேச்சு



கோவை: "பொருளாதார குற்றப்பிரிவிலும், ஊழல் தடுப்பு பிரிவிலும், மோசடிகளையும் விசாரிக்க அரசு அமைத்துள்ள தனிப்பிரிவில், பட்டயக் கணக்காளர்கள் பங்களிப்பு அவசியமானது," என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்திய பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் தென்னிந்திய மண்டல அளவிலான 53வது மாநாடு கோவையில் நேற்று நடந்தது. தென் மண்டல தலைவர் ஜலபதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காணொலி வழியாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாட்டில் எந்த இடர்பாடு நிகழ்வுகள் நடந்தாலும், முதலமைச்சர், பிரதமர் நிவாரண நிதிக்கு பட்டயக் கணக்காளர்கள் பங்களித்து சமூகப்பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் அறிவுத்திறன் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றி வருகிறது.அரசின் திட்டங்கள், நிதித்துறை, கார்ப்பரேட் நிர்வாகம் செயல்பாடுகள் மட்டுமின்றி அது தொடர்பான சட்டங்களை இயற்றவும் உங்களது ஆலோசனைகள் பயனுள்ளது.பொருளாதார குற்றப்பிரிவிலும், ஊழல் தடுப்பிலும் குற்றங்களை தனி பிரிவு விசாரிக்க தொடங்கியுள்ளது. பட்டய கணக்காளர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். பட்டயக்கணக்காளர்களின் ஆலோசனைகளையும் ஏற்று பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது.இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "அரசின் பல்வேறு திட்டங்களில், துறைகளில் கணக்கு தணிக்கை மிகவும் முக்கியமானது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் பங்களிப்புகள் மிகவும் பயனுள்ளவை.ஒவ்வொரு கட்டத்திலும் புதிய சூழ்நிலைகளில் கணக்கீடு செய்வது மிகவும் சவாலான பணியாக உள்ளது. அரசுகளின் வரி விதிப்புகளை ஆராய்ந்து, அதற்கேற்ற செயல்முறைகளை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு பட்டயக்கணக்காளர்களுக்கு உள்ளது.நவீன முறை கணக்கீடுகள், அதற்கான கருவிகள், கணக்கு தணிக்கையின் தரம் போன்றவைகளை மேம்படுத்த வேண்டும். இந்த நிறுவனம், அதற்கான கல்வி, பயிற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது," என்றார்.இந்திய பட்டயக்கணக்காளர் சங்கத்தின் தலைவர் நிகார் என் ஜம்புசரியா, முன்னாள் தலைவர் ராமசாமி, தென் மண்டல கவுன்சில் தலைவர் ஜலபதி, கோவை கிளை தலைவர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X