பொது செய்தி

இந்தியா

அறிக்கையை வெளியிடுவோம் ஆய்வு குழு உறுப்பினர் ஆவேசம்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:''புதிய வேளாண் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினர் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள அறிக்கையை நீதிமன்றம் வெளியிடாவிட்டால், நாங்கள் வெளியிடுவோம்,'' என, குழுவில் இடம்பெற்ற உறுப்பினரான அனில் ஜே.கன்வாத் தெரிவித்தார்.அறிக்கை தாக்கல் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, விவசாயிகளின் கருத்துகளை அறிந்து அறிக்கை
 அறிக்கையை வெளியிடுவோம் ஆய்வு குழு உறுப்பினர் ஆவேசம்

புதுடில்லி:''புதிய வேளாண் சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினர் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள அறிக்கையை நீதிமன்றம் வெளியிடாவிட்டால், நாங்கள் வெளியிடுவோம்,'' என, குழுவில் இடம்பெற்ற உறுப்பினரான அனில் ஜே.கன்வாத் தெரிவித்தார்.


அறிக்கை தாக்கல்

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, விவசாயிகளின் கருத்துகளை அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று பேர் அடங்கிய ஆய்வு குழுவை, உச்ச நீதிமன்றம் ஜனவரியில் நியமித்தது.
இந்த குழுவில் ஷேத்கரி சங்கத்தனா என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனில் ஜே.கன்வாத், விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிஷனின் முன்னாள் தலைவர் அசோக் குலாட்டி, வேளாண் பொருளாதார வல்லுனர் பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவினர் தங்கள் களப்பணிகளை முடித்து மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்ததை அடுத்து, தங்கள் அறிக்கையை வெளியிடும்படி ஆய்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர், உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஷேத்கரி சங்கத்தனா தலைவர் அனில் ஜே.கன்வாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:மூன்று மாதங்கள் உழைத்து ஆய்வு அறிக்கையை தயார் செய்தோம். அந்த அறிக்கை விவசாயிகளுக்கு சாதகமாகவே அமைந்தது. தற்போது சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துவிட்டதால், அந்த அறிக்கை அர்த்தமற்றதாகி விட்டது. ஆனாலும், எங்கள் உழைப்பு குப்பை தொட்டிக்கு போவதை விரும்பவில்லை.
எனவே அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும். இல்லை எனில் நான் வெளியிட்டு விடுவேன். இது குறித்து மற்ற இரண்டு உறுப்பினர்களுடன் விவாதித்து நாளை மறுநாள் முடிவு அறிவிப்பேன்.
வருங்காலங்களில் புதிய வேளாண் சட்டங்களை இயற்றும்போது, இந்த அறிக்கை மிகவும் உதவியாக இருக்கும். கோரிக்கைபுதிய வேளாண் சட்டங்ளை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்க கூடாது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேறு தீர்வுகளை அரசு கையாண்டு இருக்க வேண்டும்.

இதோடு போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்ட பூர்வமாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-நவ-202110:44:00 IST Report Abuse
R. Vidya Sagar உச்ச நீதி மன்றத்தின் கையாலாகாத்தனமும் இந்த பிரச்னை வளர முக்கிய காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X