பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் சேதமான பகுதி நீலகிரி எம்.பி., ராஜா ஆய்வு

Added : நவ 20, 2021
Share
Advertisement
ஊட்டி: மழையால் சேதமான பகுதிகளை, எம்.பி., ராஜா பார்வையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கினார்.நீலகிரியில், இரண்டு நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. ஊட்டி காந்தளில், 8 வீடு உட்பட மாவட்டத்தில், 12 வீடுகள் சேதமானது. வி.சி., காலனியில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்படைந்தது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. முகாமில், பலர் தங்க வைக்கப்பட்டனர்.நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, வனத்துறை

ஊட்டி: மழையால் சேதமான பகுதிகளை, எம்.பி., ராஜா பார்வையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கினார்.நீலகிரியில், இரண்டு நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. ஊட்டி காந்தளில், 8 வீடு உட்பட மாவட்டத்தில், 12 வீடுகள் சேதமானது. வி.சி., காலனியில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்படைந்தது. ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது.
முகாமில், பலர் தங்க வைக்கப்பட்டனர்.நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று காலை, ஊட்டி வி.சி., காலனி முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர். படகு இல்லம் பகுதியில் தடுப்பு சுவரை சீரமைக்க உத்தரவிட்டார்.எல்லநள்ளியில், பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள, மைனலா பகுதியை சேர்ந்த, 36 குடும்பங்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கினார். பாரத்நகரில் அபாய நிலையில் உள்ள வீடுகளை பார்வையிட்டார்.எம்.பி., ராஜா நிருபர்களிடம் கூறுகையில், '' சேதமான, ஊட்டி காந்தள் உட்பட பிற பகுதிகளை சீரமைக்க, எம்.பி., நிதியிலிருந்து, நிதி ஒதுக்கப்படும். மழை பாதிப்பை தடுக்க பேரிடர் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்,'' என்றார். கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி(பொ), நகராட்சி கமிஷனர் சரஸ்வதி உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X