பொது செய்தி

தமிழ்நாடு

வனக்கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் சாதனை

Added : நவ 20, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: வேளாண் ஆராய்ச்சி தேசிய அளவில் நடந்த போட்டித்தேர்வில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவிகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பெற்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், (ஐ.சி.ஏ.ஆர்.) ஒவ்வொரு ஆண்டும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில், முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை (என்.ஐ.இ.இ.) நடத்துகிறது.இந்த ஆண்டு 2021ல் நடந்து

மேட்டுப்பாளையம்: வேளாண் ஆராய்ச்சி தேசிய அளவில் நடந்த போட்டித்தேர்வில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவிகள் இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பெற்றனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், (ஐ.சி.ஏ.ஆர்.) ஒவ்வொரு ஆண்டும், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில், முதுகலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு, அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை (என்.ஐ.இ.இ.) நடத்துகிறது.இந்த ஆண்டு 2021ல் நடந்து முடிந்த தேர்வில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும், இளங்கலை வனவியல் மாணவர்கள், 9 பேர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கல்லூரி மாணவி ரத்னா இரண்டாவது இடத்தையும், ஹர்ஷா ரியாஸ் மாணவி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பார்த்திபன் கூறுகையில்," கடந்த, 16 ஆண்டுகளில், இக் கல்லூரியில் படித்த, 112 பேர் ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, இந்தியா முழுவதும் வனப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வனவியல் படித்த, 243 மாணவ, மாணவியர், நேரடியாக வனச்சரக அலுவலர் பணிக்கு தேர்வு பெற்று, தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். இக்கல்லூரியில் வனவியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கான பாடத்திட்டம் கற்று கொடுக்கப்படுகிறது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X