பொது செய்தி

தமிழ்நாடு

பிரசாத் மறைவு முதல்வர் இரங்கல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோவை தொழில்நுட்ப கல்லுாரி (சி.ஐ.டி.,) மற்றும் சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரிகளின் தாளாளர் பிரசாத் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:சி.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் தாளாளரும், காங்., முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் சகோதரருமான பிரசாத், 70, உடல் நலக்குறைவால் காலமானார். முதல்வர் ஸ்டாலின்

கோவை: கோவை தொழில்நுட்ப கல்லுாரி (சி.ஐ.டி.,) மற்றும் சி.ஐ.டி., சாண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரிகளின் தாளாளர் பிரசாத் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கல்லுாரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:சி.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் தாளாளரும், காங்., முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் சகோதரருமான பிரசாத், 70, உடல் நலக்குறைவால் காலமானார். முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், 'கல்வி வளர்ச்சிக்காக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட அவர், எண்ணற்ற பொறியாளர்களை உருவாக்கிய சாதனையாளர். தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்துக்காக பாடுபட்ட, அவரின் மறைவு கல்வித்துறைக்கு பேரிழப்பாகும்' என தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X