பெயரளவு செயல்படும் கமிட்டிகள்: குழந்தை பாதுகாப்பு கமிஷன் அதிருப்தி| Dinamalar

தமிழ்நாடு

பெயரளவு செயல்படும் கமிட்டிகள்: குழந்தை பாதுகாப்பு கமிஷன் அதிருப்தி

Added : நவ 20, 2021
Share
திருப்பூர்: ''குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய, சட்டப்பூர்வமான கமிட்டிகள், பெயர் அளவுக்கு மட்டுமே இயங்கி வருகின்றன,'' என, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி

திருப்பூர்: ''குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய, சட்டப்பூர்வமான கமிட்டிகள், பெயர் அளவுக்கு மட்டுமே இயங்கி வருகின்றன,'' என, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு கமிஷன், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.பாதுகாப்பு கமிஷன் தலைவர் சரஸ்வதி பேசியதாவது:குழந்தைகள் மீதான உரிமை மீறல்களை விசாரிக்க, உரிமையியல் நெறிமுறை தொகுப்பு சட்டம் 1908ன்படி, உரிமையியல் கோர்ட்டுக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இயங்கும், குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய, சட்டப்பூர்வமான கமிட்டிகள், பெயர் அளவுக்கு மட்டுமே இயங்குகின்றன. சில மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட போது, குழுக்கள் சரிவர இயங்காதது நேரடியாக கண்டறியப்பட்டது.வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர் வசிக்கும், தொழில் நகரான திருப்பூரில், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.தமிழக அரசு உத்தரவுப்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள், ஒன்றியம் வாரியாக, தலா, 14 பேர் அடங்கிய, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிட்டி அமைத்து, விரைவில் பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு, சரஸ்வதி பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X