அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யவேண்டும்!'

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: ''தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யவேண்டும்,'' என பா.ஜ. சிறுபான்மை தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருக்கு, பா.ஜ. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் நேற்று ஆறுதல் கூறினார்.இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சமீபமாக பள்ளியில் படிக்கும்

கோவை: ''தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யவேண்டும்,'' என பா.ஜ. சிறுபான்மை தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோருக்கு, பா.ஜ. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் நேற்று ஆறுதல் கூறினார்.இதன் பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சமீபமாக பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம், கடவுளுக்கு அடுத்து மதிக்கக்கூடிய ஆசிரியர்களே தவறாக நடந்து கொள்கின்றனர். சிலர் செய்யும் தவறால் ஒட்டு மொத்த ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.மாணவி தற்கொலைக்கு காரணமாக இன்னும் இருவர் உள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட வேண்டும். மாணவியின் பெற்றோருக்கு தமிழக அரசு நிதி வழங்க வேண்டும்.கோவை மாநகராட்சி தேர்தலில் வாக்கு வங்கியை உருவாக்க அமைச்சர் செந்தில் பாலாஜி முழுநேரமாக தங்கியிருந்து தேர்தல் வேலை பார்க்கிறார்.-கோவையில் சில அமைப்புகள், இளைஞர்களை மூளைச்சலவை செய்து, வன்முறை தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது.கேரளா அரசு இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலை கோவையிலும் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இது போன்ற அமைப்புகளை தமிழகத்தில் தடை செய்யவேண்டும்.இவ்வாறு, இப்ராஹிம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X