பொது செய்தி

இந்தியா

ரயில்களில் மீண்டும் உணவு வினியோகம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் பயணியருக்கு உணவு வினியோகிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையை, ரயில்வே நிர்வாகம் விலக்கி கொண்டது.கொரோனா தொற்று பரவல் துவங்கியதை அடுத்து, நாடு முழுதும் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவல் சற்று குறைய துவங்கியதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அப்போது, ரயில்களில் பயணியருக்கு உணவு

புதுடில்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில்களில் பயணியருக்கு உணவு வினியோகிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையை, ரயில்வே நிர்வாகம் விலக்கி கொண்டது.
கொரோனா தொற்று பரவல் துவங்கியதை அடுத்து, நாடு முழுதும் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவல் சற்று குறைய துவங்கியதும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அப்போது, ரயில்களில் பயணியருக்கு உணவு வினியோகம் செய்ய ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது.
தொற்று பரவல் தற்போது பெரும் அளவில் குறைந்துள்ளதை அடுத்து, சிறப்பு ரயில்கள் திரும்ப பெறப்பட்டு வழக்கமான ரயில் சேவை சமீபத்தில் துவங்கின.இதையடுத்து ரயில்களில் பயணியருக்கு உணவு வினியோகத்தை மீண்டும் துவக்க, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X