பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலையில் இரவு நடை அடைத்தால் ஒரு மணி நேரத்தில் திரும்ப வேண்டும்: போலீசார் அறிவுறுத்தல்

Added : நவ 20, 2021
Share
Advertisement
சபரிமலை:சபரிமலையில் இரவு நடை அடைக்கப்பட்டு விட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் திரும்பி சென்று விட வேண்டும் என்று சன்னிதான போலீஸ் தனி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்திலும், டிச., 15 வரை தவிர மீதமுள்ள நாட்களில் முன்பதிவு முடிந்து விட்டது. காலை 6:00

சபரிமலை:சபரிமலையில் இரவு நடை அடைக்கப்பட்டு விட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் திரும்பி சென்று விட வேண்டும் என்று சன்னிதான போலீஸ் தனி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலமாக தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்திலும், டிச., 15 வரை தவிர மீதமுள்ள நாட்களில் முன்பதிவு முடிந்து விட்டது. காலை 6:00 முதல் பகல் 12:00 மணி வரை நான்கு செட்டுகளாகவும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை மூன்று செட்டுகளாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு விட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து நிலக்கல் சென்று விட வேண்டுமென சன்னிதான போலீஸ் தனி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இங்கு பக்தர்கள் தங்க அறைகள் அனுமதிக்கப்படாத நிலையிலும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை வருத்தமடைய செய்துள்ளது.
கொரோனா பெரும்பாலும் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பக்தர்கள் தங்கவும், நெய்யபிேஷகம் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X