பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறை தடை மீறி பக்தர்கள் மலையேற்றம்

Added : நவ 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: பூண்டி வெள்ளிங்கிரி மலையில், வனத்துறையினரின் தடையை மீறி, கேட்டை உடைத்து பக்தர்கள் மலை ஏறினர்.கோவை அருகே பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரின் ஏழாவது மலையின் உச்சியில் சுயம்பு வடிவிலான சிவலிங்கம் உள்ளது. இங்கு பிப்., முதல் மே வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.இந்நிலையில், கார்த்திகை
 வனத்துறை தடை மீறி பக்தர்கள் மலையேற்றம்

தொண்டாமுத்தூர்: பூண்டி வெள்ளிங்கிரி மலையில், வனத்துறையினரின் தடையை மீறி, கேட்டை உடைத்து பக்தர்கள் மலை ஏறினர்.கோவை அருகே பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரின் ஏழாவது மலையின் உச்சியில் சுயம்பு வடிவிலான சிவலிங்கம் உள்ளது. இங்கு பிப்., முதல் மே வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருநாளான நேற்று, மலை ஏறுவதற்காக அதிகாலை, 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். அவர்களை, மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறி வனத்துறையினர் தடுத்தனர். இதனால், வனத்துறையினருக்கும், பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.பேரூர் டி.எஸ்.பி., திருமால், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணன் ஆகியோர், பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.கோவைக்கு கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், மலையேற கோர்ட் தடை விதித்துள்ளது எனவும், வனத்துறையினரும், போலீசாரும் எடுத்துரைத்தனர்.பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால், பக்தர்கள், தடையை மீறி, அடிவாரத்தில் இருந்த கேட்டை உடைத்து, மலை ஏறினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-நவ-202122:10:04 IST Report Abuse
அப்புசாமி இப்பிடி செய்பவர்களை அங்கேயே சுட வாணாமா? அப்புறம் போலூசை எவன் மதிப்பான்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X