பொது செய்தி

தமிழ்நாடு

செயற்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுங்க! போக்குவரத்துக்கழக ஓய்வூதியர் கடிதம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: தொ.மு.ச., பேரவையின் செயற்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொழிலாளர் முன்னேற்ற சங்க(தொ.மு.ச.,) பேரவை பொதுச் செயலாளர் சண்முகத்துக்கு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்கங்களின் பேரவை பொருளாளர் சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடிதம்:வரும், 20ம் தேதி(இன்று) போக்குவரத்து தொ.மு.ச., பேரவையின்

கோவை: தொ.மு.ச., பேரவையின் செயற்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க, போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொழிலாளர் முன்னேற்ற சங்க(தொ.மு.ச.,) பேரவை பொதுச் செயலாளர் சண்முகத்துக்கு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்கங்களின் பேரவை பொருளாளர் சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடிதம்:வரும், 20ம் தேதி(இன்று) போக்குவரத்து தொ.மு.ச., பேரவையின் செயற்குழு கூட்டம் நடக்கிறது.கடந்த ஆறு ஆண்டுகளாக, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை.
2010ல் போடப்பட்ட ஒப்பந்த உயர்வு பலன்கள், ஏழாவது ஊதிய குழு பரிந்துரை, மருத்துவ காப்பீடு திட்டம் எதுவும் வழங்கவில்லை.கேட்டால் பணம் இல்லை என்ற ஒரே காரணத்தை, கடந்த அரசு சொல்லிக் கொண்டே இருந்து. இச்சூழலில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது, விரைவில் நல்லது நடக்கும் என்றார். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 100 நாட்களுக்குள் அகவிலைப்படி உயர்வு தருவதாக தெரிவிக்கப்பட்டது.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, செயற்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறேன். நிதி நிலையை கருத்தில் கொண்டு, முதலில் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வலியுறுத்த வேண்டும். இது, 85 ஆயிரம் குடும்பத்தினரின் வேண்டுகோள்.இவ்வாறு, கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X