சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.300 கோடி மோசடி செய்தவர்கள் மீது மேலும் ரூ.2.64 கோடி ஏமாற்றியதாக புகார்

Added : நவ 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடிக்கு மேல் மோசடி செய்த சென்னை நீதிமணி 50, மனைவி மேகலா, சாயல்குடி ஆசிரியர் ஆனந்த் 48, மீதான வழக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நடக்கிறது. இவர்கள் மீதான மோசடி புகார் ஓராண்டை கடந்தும் குவிகின்றன. நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர்தங்களிடம் ரூ.2.64 கோடி மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம்
 ரூ.300 கோடி மோசடி செய்தவர்கள் மீது மேலும் ரூ.2.64 கோடி ஏமாற்றியதாக புகார்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடிக்கு மேல் மோசடி செய்த சென்னை நீதிமணி 50, மனைவி மேகலா, சாயல்குடி ஆசிரியர் ஆனந்த் 48, மீதான வழக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் நடக்கிறது.
இவர்கள் மீதான மோசடி புகார் ஓராண்டை கடந்தும் குவிகின்றன. நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர்தங்களிடம் ரூ.2.64 கோடி மோசடி செய்துவிட்டதாக ராமநாதபுரம் மாவட்டகுற்றப்பிரிவு டி.எஸ்.பி., திருமலையிடம் புகார் அளித்துள்ளனர்.
நீதிமணி, ஆனந்துடன் சேர்ந்து பில்லியன் பின் டெக் எல்.எல்.பி., என்ற நிதி நிறுவனத்துடன் இணைந்து ராமநாதபுரத்தில் 'அங்கயான்அசோசியேட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தினர்.இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5000 வட்டி தரப்படும். என மக்களிடம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தனர்.
துவக்கத்தில் முதலீட்டாளர்கள் நம்பும் வகையில் சில மாதங்கள் வட்டி கொடுத்துவிட்டு பின் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகினர்.2020 ஜூன் 9ல் ராமநாதபுரம் மூலக்கொத்தளத்தை சேர்ந்த துளசிமணிகண்டன் என்பவர், ரூ.3 கோடி மோசடி செய்ததாக நீதிமணி, மனைவி மேனகா, ஆனந்த் மீது ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தார். நீதிமணி, ஆனந்த் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நடந்த போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும் பலர் புகார் அளித்த நிலையில், ஜூன் 27 ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் வழக்கு மதுரை பொருளாதார குற்றப்பிரிவுக்குமாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
இதுவரை ரூ.300 கோடிக்கும் மேல் மோசடி கண்டறியப்பட்ட நிலையில், தொடர்ந்து புகார்கள் பெறப்படுகின்றன. நேற்று முன்தினம் மட்டும்பரமக்குடிராஜேஸ்வரியிடம் ரூ.1.21 கோடி, முத்துகிருஷ்ணனிடம் ரூ.24 லட்சம், பரமக்குடியை அடுத்த கொழுந்துறையை சேர்ந்த முருகேசனிடம் ரூ.1.8 கோடி, கதிரேசனிடம் ரூ.8 லட்சம், தெய்வேந்திர நல்லுார் அழகுமுத்து விடம் ரூ.3 லட்சம் என ஐந்து பேரிடம் ரூ.2.64 கோடி மோசடி செய்ததாக மூவர் மீதும் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஆர்.திருமலையிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடியில் நீதிமணியின் ரூ.200 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து புகார்கள்குவிவதால் ரூ.500கோடிக்கும் மேல் மோசடி நடந்திருக்கலாம், என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X