கோர்ட் உத்தரவை மீறுகிறார்களா செங்கல் சூளை உரிமையாளர்கள்?

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோர்ட் உத்தரவை மீறி சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் செங்கல் மற்றும் இயந்திரங்களை அப்புறப்படுத்தி விற்பதாக, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.கோவையில் தடாகம், மாங்கரை பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த, நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து சீல் வைத்தது.இந்நிலையில், அப்பகுதியில் சீல் வைக்கப்பட்ட சில செங்கல் சூளைகளில்

கோவை: கோர்ட் உத்தரவை மீறி சீல் வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில் செங்கல் மற்றும் இயந்திரங்களை அப்புறப்படுத்தி விற்பதாக, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.கோவையில் தடாகம், மாங்கரை பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த, நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து சீல் வைத்தது.இந்நிலையில், அப்பகுதியில் சீல் வைக்கப்பட்ட சில செங்கல் சூளைகளில் இருந்து இரவோடு இரவாக செங்கல் மற்றும் இயந்திரங்களை அப்புறப்படுத்தி, உரிமையாளர்கள் வெளி மாவட்டத்துக்கு விற்று வருவதாகவும், இதனால் செங்கல் சூளைகள் இயங்கி வந்த தடயங்கள் அழிக்கப்படுவதாகவும், சமூக நீதி கட்சித் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.பன்னீர்செல்வம் கூறுகையில், ''தடாகம் பள்ளதாக்கு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததால், 177 செங்கல் சூளைகளுக்கு சீல் வைத்து அங்குள்ள இயந்திரங்கள், பச்சை செங்கற்கள், ஜெனரேட்டர், கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்தி மூடி முத்திரையிட வேண்டும்.தடாகம் செங்கல் சூளைகளில் இருந்து, இரவு பகலாக செங்கல் கடத்தப்பட்டு வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இயந்திரங்கள், அதிநவீன ரோபோக்களை அகற்றி பழநி ஆகிய பகுதிகளுக்கு விற்று வருகின்றனர். இதுபோன்று செயல்படுபவர்கள் மீது, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X