பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பொருட்களை 'அழிக்கும்' மாநகராட்சி: தெருவிளக்குகள் ரூ.75 லட்சத்துக்கு ஏலம்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: கோவை நகர் பகுதியில் இருந்த பழைய தெருவிளக்குகளை கழற்றி விட்டு, புதிதாக எல்.இ.டி.,களாக மாற்றப்பட்டன. பழைய விளக்குகளை, 'டெண்டர்' முறையில் ரூ.75 லட்சத்துக்கு மாநகராட்சி விற்றுள்ளது.கோவை மாநகராட்சியில், 58 ஆயிரத்து, 878 தெருவிளக்குகள் உள்ளன. மின் கட்டணமாக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவிட்டு வந்தது.கட்டணத்தை குறைப்பதற்காக, அனைத்து விளக்குகளையும் எல்.இ.டி.,களாக



கோவை: கோவை நகர் பகுதியில் இருந்த பழைய தெருவிளக்குகளை கழற்றி விட்டு, புதிதாக எல்.இ.டி.,களாக மாற்றப்பட்டன.
பழைய விளக்குகளை, 'டெண்டர்' முறையில் ரூ.75 லட்சத்துக்கு மாநகராட்சி விற்றுள்ளது.கோவை மாநகராட்சியில், 58 ஆயிரத்து, 878 தெருவிளக்குகள் உள்ளன. மின் கட்டணமாக ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவிட்டு வந்தது.கட்டணத்தை குறைப்பதற்காக, அனைத்து விளக்குகளையும் எல்.இ.டி.,களாக மாற்றவும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக, 74.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆறு சிப்பங்களாக பணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, விளக்குகள் மாற்றப்பட்டன.அப்போது கழற்றப்பட்ட பழைய விளக்குகள், அந்தந்த வார்டு உதவி/ இளம் பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன.இவற்றை மின் வசதி இல்லாத ஊராட்சிகளுக்கு குறைந்த விலையில் வழங்கலாம் என, முந்தைய ஆட்சி காலத்தில் பணியாற்றிய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், துறை அதிகாரிகள் பலரும் இட மாறுதலாகி விட்டதாலும், மாநகராட்சி அதிகாரிகளும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விட்டதாலும், பழைய விளக்குகளை மீண்டும் பயன்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல் உத்தரவு யாருக்கும் தெரியவில்லை.இதனால், பழைய விளக்குகளை 'டெண்டர்' முறையில் விற்பனை செய்ய, மாநகராட்சி முடிவெடுத்து, அறிவிப்பு வெளியிட்டது. நிர்வாக பொறியாளர் (கிழக்கு) முன்னிலையில் ஏலம் கோரப்பட்டது. நான்கு நிறுவனத்தினர் ஒப்பந்தம் கோரியிருந்தன.ரூ.62.37 லட்சம் ஏலத்தொகை, 2 சதவீதம் வருமான வரி, 18 சதவீதம் ஜி,எஸ்.டி., சேர்த்து, 74.85 லட்சம் ரூபாய்க்கு, சென்னை அம்பத்துாரை சேர்ந்த நிறுவனம் ஒப்பந்தம் கோரியது.அந்நிறுவனத்தை தேர்வு செய்த மாநகராட்சி, ஏலத்தொகையை வரைவோலையாகவோ அல்லது மாநகராட்சி கருவூலகத்தில் ரொக்கமாகவோ செலுத்த வேண்டும். அதன்பின், பழைய மற்றும் பயனற்ற விளக்குகளை, அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெஸ்க், பெஞ்ச்விற்பனைக்கு ரெடிமாநகராட்சி பள்ளிகளில் உள்ள சேதமடைந்த மற்றும் உபயோகமற்ற தளவாடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.275 ஸ்டீல் டெஸ்க், 212 ஸ்டீல் பெஞ்ச், 130 மர பெஞ்ச், 67 மர டெஸ்க், 38 ஸ்டீல் டேபிள், 62 ஸ்டீல் டெஸ்க் மற்றும் பெஞ்ச் உள்ளிட்ட, 47 வகையான பொருட்கள், 1,319 எண்ணிக்கையில் இருக்கின்றன.இவற்றுக்கான மதிப்பை நிர்ணயிக்க, உதவி கமிஷனர் (வருவாய்) தலைமையில் அனைத்து மண்டல உதவி நிர்வாக பொறியாளர்கள் கொண்ட குழு அமைத்து, பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X