செய்தி செய்தி

தமிழ்நாடு

பெண்ணின் கழுத்தில் குத்திய தையல் ஊசி! லாவகமாக அகற்றிய அரசு டாக்டர்கள்

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: பெண்ணில் கழுத்தில் குத்தியிருந்த, 7.5 செ.மீ., நீளமான தையல் ஊசியை நவீன சிகிச்சையின் மூலம் பெண்ணின் உயிரை காப்பாற்றி, கோவை அரசு மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.கோவை, தியாகராய நகரை சேர்ந்த இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து, கழுத்து அறுபட்ட நிலையில் கடந்த நவ., 2ம் தேதியன்று, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, கழுத்தில் வெளிப்புற



கோவை: பெண்ணில் கழுத்தில் குத்தியிருந்த, 7.5 செ.மீ., நீளமான தையல் ஊசியை நவீன சிகிச்சையின் மூலம் பெண்ணின் உயிரை காப்பாற்றி, கோவை அரசு மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.கோவை, தியாகராய நகரை சேர்ந்த இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து, கழுத்து அறுபட்ட நிலையில் கடந்த நவ., 2ம் தேதியன்று, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, கழுத்தில் வெளிப்புற காயங்கள் இருந்ததால் முதலுதவி செய்தனர். தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.அதில், 7.5 செ.மீ., அளவிற்கு நீளமான, தையல் ஊசி கழுத்தில் மூச்சுக்குழாயிலிருந்து கழுத்து தண்டு பகுதியில் மூளைக்கு செல்லும், முக்கியமான ரத்தக்குழாய் அருகில் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.தொடர்ந்து, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் அனைவரும் கூடி ஆலோசித்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.பின்னர், நவீன சி-ஆர்ம் எக்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்குமிடத்தை உறுதி செய்து வெளியே எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார்.ஊசியை எடுக்கும் சவாலான முயற்சியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல், வெற்றிகரமாக முடித்த மருத்துவர்களை, டீன் நிர்மலா பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X