செய்தி செய்தி

தமிழ்நாடு

கணக்கியல் முறையில் மாற்றங்கள் வரும் : பட்டய கணக்காளர் சங்க தலைவர் பேட்டி

Added : நவ 20, 2021
Share
Advertisement
கோவை: "மாற்றம் பெற்று வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பட்டய கணக்காளர் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்படும்," என, இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் நிகார் ஜம்புசரியா கூறினார்.கோவையில் இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின், தென் மண்டல கவுன்சில் மாநாடு லீ மெரிடியன் ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் நிகார்



கோவை: "மாற்றம் பெற்று வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பட்டய கணக்காளர் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்படும்," என, இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தலைவர் நிகார் ஜம்புசரியா கூறினார்.கோவையில் இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின், தென் மண்டல கவுன்சில் மாநாடு லீ மெரிடியன் ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் நிகார் ஜம்புசரியா, தென் மண்டல கவுன்சில் தலைவர் ஜலபதி ஆகியோர் கூறியதாவது:கோவிட் தொற்று நிலைக்கு பின், கணக்கு தணிக்கை முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
பங்குச் சந்தையில் புதிய வெளியீடுகள், நிறுவனங்களின் கணக்கு மாற்றங்கள், கிரிப்டோ கரன்சிகள் உள்ளிட்டவை, சர்வதேச அளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்களால், கணக்கு தணிக்கை முறையிலும் தரம் உயர்த்தப்படுகிறது.அதற்கான கருவிகளிலும், மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கணக்கியல் முறையிலும், தணிக்கை முறையிலும் மட்டுமின்றி, கல்வி முறையிலும் மறு சீரமைப்பு நிகழ வாய்ப்புகள் உள்ளன.குறிப்பாக, குறிப்பிட்ட துறையில், மூலதனச் சந்தை, திவால் நிலை, வங்கிகளுக்கு இடையே பரிமாற்றம், சர்வதேச கணக்கியல் தரம் என்பது போன்ற தனித்தனியாக சிறப்பு கல்வியை ஏற்படுத்தும் நிலைகள் ஏற்பட்டு வருகின்றன.பட்டயக் கணக்காளர் கல்விமுறையிலும், மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்வி திட்டங்களை உருவாக்கவும் முயன்று வருகிறோம்.ஏற்கனவே உள்ள கல்வி திட்டங்கள், கல்வி முறைகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வருவதும், புதிய கணக்குமுறைகளுக்கான டிஜிட்டல் கருவிகளும் அவசியமாகின்றன. இந்த நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த முயன்று வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X