இரண்டு பஸ்கள் மாறி பள்ளிக்கு செல்வதற்குள் பாடம் துவங்கிடுது! பஸ் வசதி கேட்டு மாணவர்கள் கோரிக்கை

Added : நவ 20, 2021
Share
Advertisement
மதுக்கரை: மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து சுந்தராபுரம் வரும் வழியில், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு வாளையார், பிச்சனூர், நவக்கரை, க.க.சாவடி, எட்டிமடை சுற்றுப்பகுதிகளிலிருந்து, பல நூற்றுக்கணக்கானோர் பயில்கின்றனர்.இவர்கள் தினமும் டவுன் பஸ்களில், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் வரை பயணிக்கின்றனர். பின் அங்கிருந்து பள்ளிக்கு வர, மதுக்கரை மார்க்கெட்

மதுக்கரை: மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து சுந்தராபுரம் வரும் வழியில், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
இங்கு வாளையார், பிச்சனூர், நவக்கரை, க.க.சாவடி, எட்டிமடை சுற்றுப்பகுதிகளிலிருந்து, பல நூற்றுக்கணக்கானோர் பயில்கின்றனர்.இவர்கள் தினமும் டவுன் பஸ்களில், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் வரை பயணிக்கின்றனர். பின் அங்கிருந்து பள்ளிக்கு வர, மதுக்கரை மார்க்கெட் பகுதிக்கு வரும் பஸ்சிற்கு காத்திருக்க வேண்டும்.அவ்வாறு பஸ் பிடித்து வரும்போது, பள்ளியில் முதல் வகுப்பு துவங்கி விடும். இதனால் அவ்வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, மதிய உணவு நேரம் அல்லது பள்ளி முடிந்த பிறகே, உடன் பயில்வோரின் நோட்டு புத்தகத்தை வாங்கி எழுத வேண்டும்.இது ஒரு தொடர்கதையாக இருப்பதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். விரைவில் சிறப்பு வகுப்புகள் துவங்கவுள்ளன. இதனால் மாணவர்கள் மேலும் பாதிப்படைவர்.இதனை தவிர்க்க வாளையார், க.க. சாவடி, வேலந்தாவளம் ஆகிய பகுதிகளிலிருந்து புறப்படும் தடம் எண்கள், 96, எஸ் 2, 48 ஆகிய பஸ்களை காலை ஒருமுறை மட்டும், பள்ளி வரை இயக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாணவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி கவனிப்பாரா?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X