ஆயுதப்படை போலீசாருக்கு பணித்திறன் பயிற்சி! | Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

ஆயுதப்படை போலீசாருக்கு பணித்திறன் பயிற்சி! 

Added : நவ 20, 2021
Share
கோவை: அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பி.ஆர்.எஸ்.,மைதானத்தில், ஆயுதப்படை போலீசாருக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்து வருகிறது.கோவை மாநகரத்தில் அனைத்து நிலையிலும் பணிபுரிந்து வரும் ஆயுதப்படை போலீஸ் அலுவலர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த பயிற்சியானது, தொடர்ந்து 15 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான

கோவை: அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பி.ஆர்.எஸ்.,மைதானத்தில், ஆயுதப்படை போலீசாருக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்து வருகிறது.கோவை மாநகரத்தில் அனைத்து நிலையிலும் பணிபுரிந்து வரும் ஆயுதப்படை போலீஸ் அலுவலர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை, பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த பயிற்சியானது, தொடர்ந்து 15 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான பயிற்சி கடந்த 11ம் தேதி துவங்கியது. இதில், கோவை மாநகரத்தில் பணிபுரியும் ஆயுதப்படையை சேர்ந்த 900 போலீசார் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு, உடற்பயிற்சி, கவாத்து, சட்டம் சார்ந்த வகுப்புகள், துப்பாக்கி சுடும் பயிற்சி, கலவர கூட்டத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.யோகா, கபடி, கிரிக்கெட், வாலிபால், ஓட்டப்பந்தயம், த்ரோ பால், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு, 27ம் தேதி நடக்கும் நிறைவு விழாவின் போது, பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X