பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஓட்டு எனும் விதை!

Updated : நவ 20, 2021 | Added : நவ 20, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மழை நீர் வடியாமல் உள்ளதற்கு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தான் காரணம் என்று கூற முடியாது.கட்டடங்கள் கட்டுவதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது...' இப்படி
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மழை நீர் வடியாமல் உள்ளதற்கு நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியது தான் காரணம் என்று கூற முடியாது.latest tamil news


கட்டடங்கள் கட்டுவதற்கு சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது...' இப்படி புத்திசாலித்தனமாகப் பேசியிருப்பது, வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி. அதாவது அவருடைய கருத்துப்படி பார்த்தால், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைத்தது குற்றமில்லையாம்; அந்த நீர்நிலைகளில் தண்ணீர் புகுந்தது தான் தவறாம்.

இதை படித்தவுடன், தெய்வப்பிறவி படத்தின் காமெடி நினைவுக்கு வந்தது. அதில் தங்கவேலு உபன்யாசகர்; ராமாராவ் ஜோசியர். தங்கவேலு, 'நீர், ஒரு குழந்தையோட காதுகுத்துக்கு நாள் குறிச்சுத் தந்தீரே... என்னாச்சுத் தெரியுமா? எவனோ கடுக்கனோட சேர்த்து காதையும் அறுத்துண்டு போய்ட்டான்' என்பார்.

அதற்கு ராமாராவ், 'அவன் ஏன் கடுக்கனை காதுல போடுறான்? காதுல போட்டதனாலத் தானே அறுத்துண்டு போனான்' என்பார். அந்த காமெடிக்கும், நம் அமைச்சருக்கு எவ்வளவு ஒற்றுமை பாருங்கள். சினிமாவில் பார்த்து வயிறு குலுங்க சிரித்தோம்; அமைச்சரின் பேச்சைக் கேட்டு அழுகிறோம். போகிற போக்கைப் பார்த்தால், தண்ணீர் மீது கூட வழக்குத் தொடுப்பர் போல... இப்படிப்பட்டோர் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது யாரை நொந்து என்ன?


latest tamil news


கடந்த 2015-ல் ஏற்பட்ட அனுபவம் நமக்கும், அரசுக்கும் இன்னும் பாடம் கற்றுத் தரவில்லையே! சட்டத்தை வளைக்க, லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்று, நீர்நிலையில் கட்டடம் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்படுவது கண்கூடு. ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் லஞ்சம் பெற்று அனுமதி கொடுத்து விட்டனர்;

ஆனால், மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பது நாம் தானே!' நல்ல நல்ல நிலம் பார்த்து, நாமும் விதை விதைக்கணும்...' என்று எம்.ஜி.ஆர்., பாடல் ஒன்று இருக்கிறது. அதைப்போல, நம் ஓட்டு எனும் விதையையும் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், இந்த மாதிரி துக்ளக், 23-ம் புலிகேசி போன்றோரின் ஆட்சியில் தான் சிக்கி கொள்ள வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. Mariappan - CHENNAI,இந்தியா
20-நவ-202122:33:26 IST Report Abuse
E. Mariappan இவரும் எம்ஜிஆர் கண்டு பிடித்த விதை தானே
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-நவ-202121:54:17 IST Report Abuse
S. Narayanan திமுக அண்ணா திமுக இரண்டும் மக்களுக்கு பத்து ரூபாய் கொடுத்தால் அவர்கள் ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிப்பார்கள். இவர்கள் ஏரிகள் குளங்கள் காவாய்கள் என்று எல்லாவற்றையும் சுத்தம் செய்து நிரந்தர தீர்வு காணுவது என்று மக்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் இதை அவ்வப்போது எடுத்து செய்தால் தான் அவர்கள் நல்ல பணம் பார்க்க முடியும். அதனால் இந்த பிரச்சினை என்றும் தீராது. அவ்வப்போது கண் துடைப்பு நாடகம் மட்டும் நடக்கும்.
Rate this:
Cancel
20-நவ-202121:04:11 IST Report Abuse
சம்பத் குமார் 1). எம் ஜி ஆர் அவர்களின் நம்புக்கைக்கு உரிய கொங்கு மண்டல தளபதியாக இருந்தவர் முத்துசாமி அமைச்சர் அவர்கள்.2). ADMK ஜானகி அம்மா ஜெயலலிதா என்ற நிலையில் ஜானகி அம்மாவுடன் நின்று ஜெயலலிதா அவர்களிடம் கெட்ட பெயர் வாங்கி கொண்டவர்.3).பிறகு பெரிதாக அரசியலில் இல்லாமல் இருந்தவர் பிறகு என் கே கே பெரியசாமி மற்றும் அவரது மகன் என் கே கே பி ராஜா அவர்களின் முகம் சுளிக்கும் நடவடிக்கையால் திமுக முத்துசாமியை கண்டுபிடித்து தற்போது அமைச்சர் ஆக்கியுள்ளது.4). ADMK விலிருந்தப் பொழுது முத்துசாமிககு நல்ல பெயர் இருந்தது. 5). இப்பொழுது இந்த நிலமை. அதுசரி கடவுளே திமுகவிற்கு வந்தாலும் இதே நிலைமைதான். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X